Banarasi Tamatar Chaat: அருமையான தக்காளி சாட்
எல்லோருக்கும் சுவையாக சாப்பிடுவதென்றால் மிகவும் பிடிக்கும். தக்காளியை வைத்து நாம் பல வகையான உணவுகளை செய்து உண்டிருக்கலாம்.
ஆனால் தக்காளி சாட் இப்படியொரு ரெசிபியை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அந்த வகையில் இன்று சுவையாகவும் பார்ப்பதற்கு நாவை ஊறச்செயும் தக்காளி சாட் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
இந்த ரெசிபியை மிகவும் சுலபமாக செய்து முடித்து விடலாம்
தேவையான பொருட்கள்
- நெய் - 2 மேசைக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- கசகசா - 1 தேக்கரண்டி
- முந்திரி பருப்பு - 2 தேக்கரண்டி
- இஞ்சி - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- தனியா தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - 1 கப்
- சக்கரை - 3 தேக்கரண்டி
- கருப்பு உப்பு - அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சக்கரையை சேர்த்து காய்ச்ச வேண்டும். அந்த நீரில் சக்கரை முழுசாக கரையும் அளவிற்கு காய்ச்ச வேண்டும்.
பின்னர் சீரகம், கருப்பு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு அதை தனியே எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ,சீரகம் ,கசகசா ,பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பு இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இது வதங்கி ஒரு நிமிடத்திற்கு பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் பொடியாய் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் கிண்ட வேண்டும்.
இதை எல்லாத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும். இதற்கு பின்னர் தக்காளியை எடுத்து அதனுடன் சேர்த்து நன்றாக தாழிக்க வேண்டும்.
பின்னர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும். இதற்கு பின்னர் ஒரு வேகவைத்த உருளை கிழங்கை மசித்து சேர்க்க வேண்டும்.
இதை 5 நிமிடத்திற்கு வேகவைக்க வேண்டும். இப்போது அருமையான தக்காளி சாட் தாராகி விட்டது. இதற்கு பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் வைத்து அலங்காரம் செய்து பரிமாறிக் கொள்ளலாம்.