வெண்டைக்காய் வேகவைத்த தண்ணீர் குடிச்சா உடலில் இத்தனை அற்புதங்களா?
வெண்டைக்காய் காய்கறிகளிலே மிகவும் சிறந்த ஒரு காய்கறியாகும். இதை தினசரி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கும்.
இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல நன்மைகளை அள்ளி தர கூடியது.
வெண்டைக்காயில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும்.
அந்த வகையில் வெண்டக்காயை தினமும் வேகவைத்து தண்ணீர் குடிப்பதால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெண்டைக்காய் தண்ணீர்
இந்த தண்ணீரை தயார் செய்வதற்கு மூன்று அல்லது நான்கு வெண்டைக்காயை கழுவி எடுத்து இதை கொஞ்சமாக கீறி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
இதை அடுத்த நாள் காலையில் எடுத்து வேகவைத்து தண்ணீர் குடித்தால் மிகவும் நன்மை தரும். வெண்டைக்காய் வேகவைத்த தண்ணீரில் வைட்டமின் சி வைட்டமின் கே போன்ற ஏராளமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மற்றும் இந்த காய்கறியில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகமாக இருக்கின்றன. நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் இந்த காய்கறியின் தண்ணீரை குடிப்பதால் ஜீரணப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதனால் குடல் இயக்கம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். நீரிழிவு நோயாளிகள் இந்த வெண்டைக்காய் நீரை எடுத்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
ரத்தத்தில் இருக்கும் கொலட்ஸ்ரோலின் தன்மையை குறைக்க வெண்டைக்காயில் உள்ள பல்வேறு மூலக்கூறுகள் உதவி செய்கின்றன. இதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.
உடல் பருமன் ஆரோக்கியமான வழியில் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வெண்டைக்காய் வேகவைத்து நீரை குடித்து வந்தால் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கலாம்.