Angel Numbers: இதற்கான அர்த்தம் என்ன தெரியுமா? உங்கள் கண்களுக்கு தெரிவது ஏன்?
நீங்கள் திடீரென ஒரு தொடர் வரிசை எண்களை அடிக்கடி பார்க்கிறீர்கள் என்றால் அதாவது( 111,222 )போன்ற எண்களை பார்த்தீர்கள் என்றால் அதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?
தேவதை எண்கள்
நாம் சில நேரங்களில் பார்க்கும் போது நமது கண்களுக்கு ஒரு தொடர்வரிசை எண்கள் திடீரென தென்பட்டு இருக்கலாம்.
இது ஆச்சரியமல்ல ஆனால் இது ஏன் அடிக்கடி கண்களின் பார்வைக்கு படுகிறது என்பது யாருக்காவது அர்த்தம் தெரியுமா? ஆனால் இதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
பொதுவாக உங்கள் பழக்கப்பட்ட இடங்களில், அல்லது புது இடங்களில் கடிகாரங்களில் அல்லது வேறு இடங்களில் 111, 222, 666 இது போன்ற இதுபோன்ற எண்களை தற்செயலாக பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்.
இதற்கான அர்த்தம் என்ன?
தேவதை எண்கள் என்பது 111 அல்லது 222 போன்ற எண்களின் தொடர்ச்சியான வரிசைகள் ஆகும். இவை எதிர்பாராத விதமாக உங்கள் கண்களுக்கு தோன்றலாம். இந்த எண்கள் சாதாரண எண்கள் இல்லை இவை பிரபஞ்சத்திலிருந்து ஒரு ஆன்மீக செய்தியை உங்களுக்கு கூறுகிறது.
இதுபோன்ற எண்களை பார்ப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதை உறுதியளிக்கின்றன.
உங்கள் முடிவுகளை நீங்கள் யாரிடமும் சரியா என கேட்க நினைக்கும் நேரத்தில் அதற்கான குழப்பத்தில் இருந்தால் உங்கள் முடிவு சரி தான் என பிரபஞ்சம் உங்களுக்கு கூறுவதற்காக இந்த எண் உங்கள் கண்களில் படலாம்.
இதன்போது நீங்கள் ஏதாவது முடிவு எடுத்து இருந்தால் அவை நன்மைக்கு தான் என்பதை நம்புங்கள்.
தேவதை எண்கள் உங்கள் ஆன்மீக தொடர்பை ஆழப்படுத்தும். இதன்போது இந்த பிரபஞ்சம் உங்கள் உண்மையான நோக்கத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு பாதையை இந்த தேவைதை எண்கள் உருவாக்கும்.
அவை தெய்வீக பாதையை பரிணமிக்க நம்புவதற்கான அழைப்பாக செயல்படுகின்றன.
இந்த தேவதை எண்கள் உங்கள் உள்ளுணர்வை நம்புவதற்கான ஒரு அழைப்பாக பிரபஞ்சத்திடம் இருந்து அனுப்புகின்றன. நீங்கள் ஒரு விடயத்தியத்தில் குழப்பமாக இருந்தால் அதில் உங்கள் உள் உணர்வை இந்த பிரபஞ்சம் நம்ப கூறும் ஒரு சமிஞ்சையாக இந்த தேவதை எண்கள் கூறுகின்றது.
நீங்கள் தேவதை எண்களில் ஒரே எண்ணை அடிக்கடி பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் தனியாக இல்லை என்று அர்த்தம்.
நீங்கள் ஆதரவு மற்றும் அன்பால் சூழப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் அதை உணராவிட்டாலும் அது தான் உண்மை என்பதை இந்த பிரபஞ்சம் உங்களுக்காக தேவதை எண்கள் மூலம் கூறுமாம்.
மீண்டும் மீண்டும் வரும் எண்கள் ஒரே எண்கள் உங்கள் விழிப்புணர்வை, உங்கள் நேர்மறை ஆற்றலை உருவாக்கும் ஒரு குணப்படுத்தும் செயல்முறையைக் எனப்படுகின்றது.
பிரபஞ்சம் மீது நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் இந்த தேவதை எண்கள் தோன்றும், நீங்கள் நினைத்ததை உண்மை என நம்புங்கள். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு துணையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
