Astrology: ராஜதந்திரிகள் பிறந்த மாதம் எது தெரியுமா? நினைத்த காரியத்தை நடத்தி காட்டுவார்களாம்
ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த மாதத்தை பார்த்து அவர்களின் ஆளுமை மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் ஆகியவற்றை கணிக்கலாம்.
அந்த வகையில், குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் எப்படியான நிலை வந்தாலும் சமாளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனம் மற்றவர்களுக்கு இலகுவில் வராது.
ஒரு விடயத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்காக சில சூழ்ச்சிகளை செய்வார்கள். ஆனால் அதனை யாராலும் கண்டுபிடிக்கக் கூட முடியாது.
அவர்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனத்தை தந்திரமாக வைத்து தேவையான விடயங்களை கைக்குள் கொண்டு வருவார்கள்.
இவ்வளவு சிறப்புகளுடன் இருப்பவர்கள் பிறந்த மாதம் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
பிப்ரவரி | பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் பிறப்பிலேயே புத்திசாலிகளாக இருப்பார்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றால் போன்று தன்னை நடத்துவார்கள். வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை வேறு ஒரு கோணத்தில் சிந்தித்து முடிவெடுப்பார்கள். உள்ளுணர்வு மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களை கவனித்து நடப்பார்கள். தன்னிடம் உள்ள பேச்சுதிறனால் மற்றவர்களை தன்னுடைய வழிக்கு கொண்டு வருவார்கள். |
மே | மே மாதம் பிறந்தவர்கள் பல திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். இரட்டை ஆளுமையை கொண்டிருப்பதால் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். இந்த குணங்கள் அவர்களை தந்திரவாதிகளாக மாற்றும். பிறரை மூளைச்சலவை செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் தனக்கு சாதகமாக இருப்பார்கள். விரைவான சிந்தனை மற்றவர்களை ஈர்க்கச் செய்யும். இவர்களிடம் முடிந்தளவு பிரச்சினை செய்யாமல் இருப்பது நன்று. |
அக்டோபர் | அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் மிகுந்த மன வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். ரகசியங்களை வெளியில் கூறாமல் தனக்குள் வைத்து கொண்டு அதற்கு ரசியான தீர்வை காண்பார்கள். பிறருடைய மனநிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றால் போன்று அவர்களின் செயல்களை மாற்றுவதில் கில்லாடிகளாக இருக்கும் இவர்களை திருமணம் செய்தால் சற்று நிதானமாக இருக்க வேண்டும். கவர்ச்சியான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். சூழ்நிலைகளை திறமையாக கையாண்டு சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொள்வார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).