யோகிபாபு குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்வி! அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?
நடிகர் யோகிபாபு தன்னைப் பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
நடிகர் யோகிபாபு
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். தனது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் இவர், சினிமாவில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார்.
அவ்வப்போது கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வரும் நிலையில், இதில் மண்டேலா, பொம்மை நாயகி மாபெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
வரும் ஆகஸ்ட் 2ம் தேதி போட் என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள யோகிபாபு தன்னைப் பற்றி கூகுளில் அதிகமாக தேடப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
கூகுளில் தேடப்பட்ட கேள்வி
யோகிபாபு தனக்கு பிடித்த கொமடி நடிகர் யார் என்ற கேள்விக்கு எம்.ஆர்.ராதா என்று பதிலளித்துள்ளார். மேலும் இவரது கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு தான் 10th பெயில் என கூறிய அவர், அதன்பின் ஸ்கூலுக்கு செல்லாமல் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்ததாக தெரிவித்தார்.
தான் நடித்த போட் மற்றும் கோட் திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று அவர்கூறியுள்ளார். இதற்கு பின்பு அஜித், விஜய், மடோன் அஸ்வின் இவர்களுடன் படங்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறியுள்ளார்.
தனக்கு பிடித்த ஹீரோயின் குறித்த கேள்விக்கு, எல்லாருமே பிடிக்கும் என மழுப்பலான பதிலை சொல்லி எஸ்கேப் ஆகியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |