வராகி அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் யோகி பாபு தனக்கு சொந்தமான இடத்தில் வராகி அம்மனுக்கு கோயில் ஒன்றை கட்டி அதன் கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்.
சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு தனக்கு அனைத்து யோகங்களையும் வாரி வழங்கி வரும் வராகி அம்மனுக்கு கோயில் கட்டி உள்ளார்.
சினிமாவில் யோகக் கார யோகி பாபுவாக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபுவுக்கு கடவுள் பக்தி அதிகம்.

தனது ட்விட்டர் பக்கத்திலேயே முருக கடவுளின் புகைப்படத்தை தான் வைத்திருப்பார்.
தனது திருமணத்தையும் குலதெய்வ கோயிலில் மிகவும் எளிமையான முறையில் நடத்தி முடித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் நகரம் பேடு கிராமத்தில், நடிகர் யோகிபாபுவிற்கு சொந்தமாக இடம் இருக்கிறது.
இங்கு வாராஹி அம்மனுக்கு கோவில் கட்டி வெகுவிமர்சையாக இன்று கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளார். இதில் யோகிபாபுவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து யோகிபாபுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.