யோகா டீச்சர் டூ டாப் நடிகை! அனுஷ்கா ஷெட்டிக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கா?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நீண்ட காலம் வெற்றிநடை போட்டவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி நேற்றைய தினம் தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில், அவரின் பழைய பதிவொன்று இணையத்தில் ரசிகர்களால் மீண்டும் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.

அனுஷ்கா ஷெட்டி
அருந்ததி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி.
இப்படத்திற்கு முன் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், அருந்ததி தான் நல்ல அடையாளத்தை இவருக்கு உருவாக்கியது. அதன் பின்னர் அருந்ததி புகழ் அனுஷ்கா என்று குறிப்பிடும் அளவுக்கு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.

இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த அனுஷ்காவிற்கு சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இதை தொடர்ந்து சிங்கம் 2, வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், வானம், லிங்கா, என்னை அறிந்தால் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
அனுஷ்கா நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றன. அனுஷ்கா தேவசேனாவாக நடித்த அந்த இரண்டு படங்களும் உலக அளவில் ரூ. 2 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் இவர் தனது உடல் எடையை அதிகரித்தார். உடல் எடை கூடியதன் காரணமாக சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
இதன்பின் ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்த அனுஷ்கா இறுதியாக Miss Shetty Mr Polishetty எனும் படத்தில் நடித்திருந்தார்.

சினிமாவில் அறிமுகமாகும் முன்னர் அனுஷ்காபெங்களூரில் யோகா டீச்சராக வேலை செய்து மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பாதித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், யோகா கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற முடிவு தான் என் வாழ்க்கையின் முக்கியமான முடிவு ஆகும்.
என் குடும்பத்தில் டாக்டர்கள், என்ஜினியர்கள் தான் அதிகம். அப்படி இருக்கும்போது நான் யோகாவை தேர்வு செய்தது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
தற்போது என் வாழ்வில் நடக்கும் அனைத்துக்கும் யோகா தான் காரணம் என குறிப்பிட்டு, அனுஷ்கா ஷெட்டி போட்ட பழைய பதிவென்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |