ஒட்டுமொத்த உடல் பிரச்சனையையும் சரிசெய்யும் யோகாக் கலை... முழுமையான விளக்கம்
பொதுவாகவே தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பழு, துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை, தவறான உணவு முறை, ஒரே இடத்தில் அமர்ந்தபடி நீண்ட நேரம் வேலை பார்ப்பது, மன அழுத்தம், பதற்றம போன்ற பல்வேறு காரணங்களால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.
அன்றாட வாழ்வில் யோகா செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
யோகா கலையானது உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதுடன், மனதையும் உடலையும் வளர்ப்பதற்கான முழுமையான அணுகுமுறையாக பார்க்கப்படுகின்றது.
மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆடீராக்கியத்துக்கும் யோகா எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
யோகா கலை
5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையாக யோகக் கலை திகழ்கின்றது. இது வாழும் கலை பயிற்சி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும்.
“யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள் கொடுக்கப்படுகின்றது.
அதாவது உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையுமே யோகாசனம் என அழைக்கின்றோம்.
தியான யோகா உள ஆரோக்கியத்தையும், ஆசன யோகா உடல் ஆரோக்கியத்தையும் மேப்படுத்துவதாக அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடலையும் உள்ளத்தையும் ஒரு சமநிலைக்குக் கொண்டுவரும் வாழ்வியல் பயிற்சியே யோகா. அதற்கு வயது வரம்பு கிடையாது. இது அனைவருக்குமான ஓர் ஆரோக்கிய வழிமுறையாகவே பார்க்கப்படுகின்றது.
5 வயது குழந்தைகள் முதல் 80 வயது முதியவர்கள் வரை அனைவரினதும் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
யோகாவின் நன்மைகள்
வயது முதிர்வு அடையும்போது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குறையத் ஆரம்பிக்கும்.
இதனால், நமது உடலில் பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. யோகாசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மூலமாக உடல் ஆரேதக்கியத்துடனும் மன அமைதியுடனும் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.
யோகா செய்வதால், வயதாகும் போது எலும்புத் தேய்மானத்தைத் தடுக்க முடியும். இதனால் ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்கிற நிலை வராமல் பாதுகாப்பு பெற முடியும்.
யோகா பயிற்சிகள் செய்வதால், உடலும் மனதும் அமைதி அடைகின்றது, இதன் மூலம் நீண்ட மற்றும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் யோகா வழி செய்கிறது.
யோகாசனம், தியானம், மூச்சுப் பயிற்சி ஆகிய மூன்றும் ஒன்று சேரும்போது, அது நமது மூளையை தெளிவாகவும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட வைக்கிறது. அதனால் மன அழுத்தம் நீங்கி மூளை தெளிவாகவும் ஆற்றலுடனும் செய்ற்பட ஆரம்பிக்கும்.
யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம். இதனால் நம்முடைய இரத்த ஓட்டம் சீரடைகிறது.
இன்றைய காலகட்டத்தில் கடைகளில் விற்கும் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதாலும் பலருக்கும் வயிற்றில் தொப்பை அதிகரித்துவிடுகின்றது.
யோகானசனங்களில் நவுகாசனா, உஷட்ரசனா, போன்ற யோகாசனங்களை செய்வதன் மூலம் சுலபமாக தொப்பை பிரச்சினைக்கு முடிவுகட்டிவிடலாம்.
யோகா பயிற்சிகளை தினசரி செய்வது முதுகு வலியில் இருந்து நிவாரணம் கொடுப்பதுடன் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.
தன்னியக்க நரம்பு மண்டலத்தில் சமநிலையை ஏற்படுத்துகிறது. இதயத்தின் திறன் மேம்படுகிறது. சுவாசிக்கும் திறன் மேம்படுகிறது. இரைப்பையின் செயல்பாடு இயல்பாகிறது.
நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு இயல்பாகிறது. உடலின் கழிவு வெளியேற்றும் செயல் மேம்படுகிறது. தசைக்கூடுகள் வளைந்து கொடுக்கும் தன்மை பெறுகிறது.
உடல் எடை சீராக இருக்க உதவுகிறது. தூக்கத்தை மேம்படுகிறது. நோய் எதிர்ப்பாற்றளை அதிகரிக்க செய்கிறது.
பலம், மீண்டு வருதல், தாங்கும் ஆற்றல், சக்திநிலை, தளரா உறுதி ஆகியவற்றை அதிகரிக்கிறது. உடல் பாகங்களிடையே ஒருமித்த செயல்பாடு, கண்-கை கூட்டு செயல், சமநிலையை அதிகரிக்கிறது.
பதட்டம் மற்றும் மனச்சோர்வை குறைகிறது. கவனம், மனம் குவிப்பு திறன் மேம்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. கற்றல் திறனை அதிகரிக்கிறது.
மொத்ததில் தினசரி யோகா பயிற்சி செய்வதால், எற்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
![Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்](https://cdn.ibcstack.com/article/e41b08a3-e02b-4259-a3d6-eea6d3a9a943/24-6765442bbf32b-sm.webp)
Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![முதன்முறையாக விமானத்தை ஓட்டும் பைலட்டின் சட்டை கிழிக்கப்படுவது ஏன்?](https://cdn.ibcstack.com/article/24b66abf-6677-459c-b9ce-1e1f33b18c9b/25-67ae080907cc3-md.webp)