யாஷிகா வீட்டில் இவ்வளவு பெரிய சிவன் சிலையா? உயிரிழந்த தோழி நினைவாக செய்த காரியம்
முன்னனி கிளாமர் நடிகையாக வலம் வரும் யாஷிகாவின் ஹோம் டூர் காணொளியை தற்போது காணலாம்.
நடிகை யாஷிகா
மிகவும் குறுகிய காலத்தில் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகை யாஷிகா பஞ்சாப் மாடல் அழகி ஆவார்.
இவரின் கவர்ச்சியான நடிப்பிற்கே ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் தனது உண்மையான முகத்தை காட்டி விளையாடிய யாஷிகா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிய விபத்தில் சாவின் விழிம்பிற்கு சென்று திரும்பியுள்ளார்.
விபத்தில் சிக்கிய யாஷிகா
கடந்த 2021ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி நண்பர்களுடன் புதுச்சேரி சென்று திரும்பிய யாஷிகா படுவேகமாக கார் ஓட்டி வந்தார். அப்பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
இதில் யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் யாஷிகா படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.
தோழியின் மரணத்தை நினைத்து அதிகமான நாட்கள் கவலைபட்டுக்கொண்டிருந்த யாஷிகா பின்பு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனாலும் ரசிகர்கள் அவரை தோழியை கொலை செய்தவர் என்று கூறி அதிகமாக காயப்படுத்தி வந்தனர்.
பின்பு தோழியின் மறைவிற்கு பின்பு பைக், கார் இவற்றினை ஓட்டமாட்டேன் என்று யாஷிகா முடிவு செய்தார். தற்போது கிளாமராக வலம்வரும் யாஷிகா தனது வீட்டினை சுற்றிக் காட்டியுள்ளார்.
9 அடியின் சிவன் சிலை
நடிகை யாஷிகா பார்ப்பதற்கு பயங்கர கிளாமராக உள்ள நிலையில், அவரது வீட்டில் பழங்கால பொருட்கள், ஆன்மீக சிலைகள் இவைகளே அதிகமாக இருக்கின்றது.
வீட்டில் சென்றால் மியூசியம் செல்வது போன்று நினைப்பை ஏற்படுத்தும் வகையில் அரிய பொருட்களை வைத்துள்ளார். மேலும் 9 அடி உயரத்தில் சிவன் சிலையும், 90 கிலோ எடையுள்ள புத்தா சிலையும் ஹைலைட்டாக இருக்கின்றது.
மேலும் வீட்டில் காணப்படும் மின் விளக்குகள் மற்றும் சமையலறை அனைத்தும் பிரமிக்க வைக்கும் அளவில் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |