அஜித் வீட்டு மருமகளாகும் யாஷிகா ஆனந்த்? வைரலாகும் புகைப்படம்
பிக்பொஸ் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் பிக்பொஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே அங்கே சக போட்டியாளராக இருந்த மஹத் என்பவருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டார்.
இந்நிலையில் அதற்குப் பின் இவர் குடிபோதையில் காரை செலுத்தி, இவரது தோழி இறந்து, இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டு, தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவர் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு இருக்க நடிகர் ரிச்சர்ட் ரிஷி பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் யாஷிகா ஆனந்த், அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.