26 ஆண்டுக்கு பின் மீண்டும் வரும் Yamaha RX 100 - பயங்கர குஷியில் ரசிகர்கள் ; அம்சங்கள் என்னென்ன?
இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனத்தில் பிடித்த ஒரே வாகனம் என்றால் அது RX 100 ஆக தான் இருக்கும். இந்த பைக் மீது இருக்கும் மோகம் இன்றளவும் குறையவில்லை.
இந்தியாவில் யமஹா நிறுவனம் ஆர்எக்ஸ்100 பைக்கின் உற்பத்தியை முதன் முதலாக 1985-ம் ஆண்டில் தொடங்கியது. 1996-ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்த ஆர்எக்ஸ்100 பைக் பல்வேறு காரணங்களால் மோட்டார் சைக்கிள் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டது.
26 ஆண்டுகள் ஓடியது, இருந்தும் ஆர்எக்ஸ் 100 பைக்கிற்குக் தற்போதும் நல்ல டிமாண்ட் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மிகவும் பிரபலமான RX 100 பைக்கை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இந்த பைக்கில் BS6 மாடல் உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனமானது 2026 ஆம் ஆண்டிற்கு மேல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் MT-07 மற்றும் யமஹா R7 ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்த யமஹா RX 100 பைக்கை உடனடியாக முடிவெடுத்து அறிமுகம் செய்ய முடியாது.
இதுமட்டுமின்றி இந்த பைக் முடிந்த அளவு அதிக திறன் கொண்ட என்ஜின் மற்றும் டிசைன் அம்சங்கள் கொண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

ஆனால், இந்த பைக் எப்படி வெளியாகும் என தெரியவில்லை. லக்ட்ரிக் வடிவிலும் வெளியாகலாம். ஆனால் இந்த பைக் பழைய மாடலில் என்ஜின் சத்தம் என்பது பைக் ஓட்டும் பலரின் கனவாக இருந்துவருகிறது.
ஏற்கனவே பஜாஜ் நிறுவனம் அதன் பிரபல சேட்டக் ஸ்கூட்டரை எலக்ட்ரிக் வடிவில் வெளியிட்டது. அதே முறையை யமஹா நிறுவனமும் பின்பற்றக்கூடும்.
இந்த பைக்கை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் எலக்ட்ரிக் வாகனகமாக வெளியிடலாம்.