செல்போன் கூட வைக்க முடியாத ஹேண்ட்பேக்... விலை இத்தனை கோடியா? அசத்தும் அம்பானி மருமகள்
முகேஷ் அம்பானியின் மருமகள் ராதிகாவின் ஹேண்ட் பேக்கின் சீக்ரெட் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானி
உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் இளைய மகனும், அம்பானியின் செல்லப்பிள்ளையாகிய ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்த மார்ச் முதல் தேதியில் ப்ரீ வெட்டிங் விழா நடைபெற்றது.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி திருவிழாவாக நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவுக்கு சுமார் 700 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. இந்நிலையில் தான் ராதிகாவின் குட்டி ஹேண்ட் பேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராதிகாவின் குட்டி ஹேண்ட் பேக்
எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் அம்பானியின் குடும்பத்தினர் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிகமான சீக்ரெட் இருக்கும். அதே போன்று ராதிகா கையில் குட்டி ஹேண்ட் பேக் வைத்துள்ளார்.
செல்போன் கூட வைக்க முடியாத இந்த குட்டி ஹேண்ட் பேக்கை எப்பொழுதும் ராதிகா கையிலேயே தான் வைத்திருப்பாராம்.
Hermes Morphose நிறுவனத்தின் குட்டி ஹேண்ட் பேக்கான இதன் விலை, சுமார் 1.93 கோடி ரூபாய் ஆகும். இதுமட்டுமல்ல இதேபோல் பல காஸ்டிலியான பேக்கை வைத்துள்ளார்.
அதன்படி 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய Hermès Kelly Pink Crocodile Leather Bag ஒன்றை வைத்துள்ளார். ராதிகாவின்
இந்நிலையில் தற்போது ராதிகாவின் ஹேண்ட் பேக் கலெக்சன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |