200 எம்பி கேமராவுடன் களமிறங்கும் சியோமியின் முதல் ஸ்மார்ட்போன்- சிறப்பு அம்சங்கள் என்ன தெரியுமா?
இந்திய மார்க்கெட் சந்தையில், அதிகமாக நல்ல விற்பனையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனம் என்றால் அது சீன நிறுவனமான சியோமின் தான்.
பல ஸ்மார்ட் போன் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருப்பதால் மக்களின் எதிர்ப்பார்ப்பும் அடுத்தடுத்த அப்பேட்டை நோக்கி செல்கின்றனர்.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு சியோமியின் அடுத்த ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 895 செயலி மற்றும் 200 மெகாபிக்சல் ப்ரைம் கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் கேமரா சென்சாரைப் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சென்சார் சாம்சங் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நிறுவனம் அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. மேலும், புது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 895 பிராசஸர் மற்றும் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கேமரா சென்சாரை சாம்சங் உருவாக்கி வருகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் 200 எம்பி கேமராவுடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம். 200 எம்பி கேமரா சென்சார் முதன் முதலில் சாம்சங் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் 200 எம்பி சென்சார் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போனின் மீது எதிர்ப்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.