உலகின் விலை உயர்ந்த காலணி இதுதான்... விலையை கேட்டால் வாயடைச்சி போயிடுவீங்க!
பொதுவாகவே தற்காலத்தில் யாரும் காலணி இல்லாமல் வெளியில் செல்வது கிடையாது. ஆனால் முன்னைய காலங்களில் சாதியின் அடிப்பமையில் உயர்ந்த வர்க்கத்தினர் மட்டுமே காலணியை அணிந்துள்ளனர்.
அதனால் பண்டைய காலத்தில் காலணிகள் அதிகாரத்தின் மற்றும் செல்வந்தர்களின் அடையாளமாக பார்க்கப்பட்டது. ஆனால் உலகமயமாதலின் காரணமாக செருப்புகளும், ஷூக்களும் இன்று மலிவாகிவிட்டன.
இருப்பினும் இன்றும் கூட பிராண்டட் ஷூ மற்றும் செருப்புகளின் மீது மோகம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காகவே காஸ்ட்லியான ஷூக்களை தயாரித்து வருகிறது மூன் ஸ்டார் எனும் நிறுவனம்.
இந்நிறுவனம் சமீபத்தில் உலகின் காஸ்ட்லியான ஷூவை துபாயில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தியது. இதன் சிறப்பம்சங்களை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விலை எவ்வளவு தெரியுமா?
இந்த விலை உயர்ந்த காலணியை இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ வியட்ரி என்ற வடிவமைப்பாளர் ஒருவர் தான் உருவாக்கியுள்ளார்.
இதற்கு மூன் ஸ்டார் என்ற பெயரும் வைக்கப்படுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்த காலணி தயாரிக்கப்பட்டிருந்தாலும் தற்போது தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு மரியாதை செலுத்தும் முகமாக குறித்த காலணி உருவாக்கப்பட்டுள்ளதாம். இதன் குதிகால் பகுதி முற்றிலும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காலணியை 30 காரட் வைரக் கற்களால் அலங்கரித்துள்ளதுடன் இந்த காலணியின் மதிப்பை இன்னும் கூட்டும் வகையில் விண் கல்லையும் இதில் இணைத்து வடிவமைத்துள்ளனர்.
1576 ஆம் ஆண்டுக்கு முன்பு பூமியில் விழுந்த விண் கல்லை இந்த காலணியில் இணைத்துள்ளார்களாம்.வடிவமைப்பாளரான அன்டோனியோ வியட்ரி இதற்கு முன்பும் பல விலை உயர்ந்த பொருட்களை வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளார்.
உலகின் முதல் 24 காரட் தங்க காலணிகளை உருவாக்கிய பெருமையும் இவரையே சேரும். அந்த ஷூவை பார்த்து அனைவரும் வாயடைத்து போய்விட்டனர்.விலையை கேட்டால் நெஞ்சே அடைத்துவிடும். இதன் மதிப்பு ரூ. 164 கோடி வரை இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
எதிர்காலத்தில் இன்னும் இதுபோன்ற பல பொருட்களை உருவாக்குவேன் என வடிவமைப்பாளர் அன்டோனியோ வியட்ரி தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |