உலகிலேயே அதிக விலையுயர்ந்த பழம்: உலக சாதனை படைக்கும் அளவிற்கு ஏறி போன விலை!
பொதுவாகவே பழங்கள் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. நாம் எமது அன்றாட வாழ்க்கையில் எப்படியும் ஒரு பழங்களை சரி சாப்பிட்டு விடுவோம்.
பழங்கள் ஒரு முக்கியமான உணவாகவே பார்க்கப்படுகிறது. நாங்கள் பழங்களை வாங்கும் போது அதன் தரம், விலை என்பனவற்றை பார்த்து வாங்குவது தான் வழக்கம். எம்மால் வாங்க முடியாத விலையுயர்ந்த பழங்களை நாம் வாங்கவே மாட்டோம்.
அவ்வாறுதான் 10 இலட்சத்திற்கு திராட்சைப்பழங்கள் விற்கப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உலகிலேயே அதிக விலையுயர்ந்த பழமாக உலக சாதனைப் படைத்திருக்கிறது திராட்சைப்பழம்.
அதிக விலைக்கொண்ட பழம்
ரூபி ரோமன் திராட்சைப் பழம் ஹியோகா மாகாண அங்காடியில் விற்பனையாகிறது. இது ஒரு அரிய வகைத்திராட்சைப்பழம் என கூறப்படுகிறது.
இந்த திராட்சை சராசரி திராட்சையை விட நான்கு மடங்கு பெரியதாகும். மேலும், இந்த ரக திராட்சைப் பழம் ஒரு ஆண்டிற்கு 2400 கொத்து மாத்திரம் தான் உற்பத்தி செய்யப்படுதாக கூறப்படுகிறது.
இதன் குறைவான உற்பத்தியால் தான் இத்திராட்சைகள் இலட்சக்கணக்கில் விற்பனையாகிறது. இதில் வியப்பு என்னவென்றால் இதன் ஒரு திராட்சைப் பழமே 35ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறதாம்.
உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என்ற பட்டத்தையும் இந்த ரூபி ரோமன் திராட்சைப்பழம் பெற்றுள்ளது.
அதிக விலை காரணமாக உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. மேலும், ஜப்பானில் ரூபி ரோமன் திராட்சை 2020 இல் ஏலத்தில் $ 12,000 (சுமார் ரூ. 9.76 லட்சம்) விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.