உலகின் நீளமான சுரங்கப்பாதை - பயன்பாட்டிற்கு வந்தது எங்கே?
சீனாவில் உலகின் மிகநீளமான சுரங்கப்பாதை நேற்று முதல் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
நீளமான சுரங்கப்பாதை
உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று. சீனா சாதாரண பொருட்கள் முதல் அறிவியல் தொழில்நுட்பம் வரை அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் இருக்கும் நாடாகும்.
அந்த வகையில் உலகிற்கு பல்வேறு தொழில்நுட்பங்களை வழங்கி வரும் சீன தற்போது மிகப் பிரமாண்டமான சுரங்கப் பாதையொன்றை அமைத்துள்ளது.

உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதையான இதன் நீளம் சுமார் 22.13 கிலோ மீட்டர் எனக் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள தியான்ஷாங் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையை தற்போது திறந்து வைத்துள்ளது அந்நாட்டு அரசு.
சுரங்கப்பாதையின் சுவர் நெடுகிலும் வண்ண வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. சின்சியாங் உன்குர் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த சுரங்கப்பாதை.
பணிகள் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையால் பயண நேரம் வெகுவாகக் குறையும் எனக் கூறப்படுகிறது.

சின்சியாங் பிராந்தியத்திலுள்ள வடக்கு மற்றும் தெற்கில் உள்ள பல நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வேலைகளையும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிகப் பிரமாண்டமான உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதை தற்போது சீனாவில் திறக்கப்பட்டிருப்பது, சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |