உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? இது தான் காரணமாம்
பொதுவாக மனிதனுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் இன்றியமையாதது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் மகிழ்ச்சி இல்லையென்றால் என்ன இருந்தும் பயன் இல்லை.
வேலையில்லா பிரச்சினை, பணவீக்கம், வறுமை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உலக நாடுகளில் காணப்படுகின்றது.இதனால் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு நாடு 6 ஆண்டுகளாக மகிழ்ச்சியான நாடு என்ற இடத்தை தக்க வைத்துள்ளது. கணக்கெடுப்பின் படி, உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற இடத்தில் பின்லாந்து நிலைப்பெற்றுள்ளது.
இந்த நாட்டிலுள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் ஒரு போதும் எளிதில் ஏமாற்றமடையமாட்டார்கள் என சில விமர்சகர்கள் தெரிவிக்கின்ற அளவுக்கு இந்த நாடு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
உளவியலாளர் ஃப்ராங் மார்டெல்லாவின் கூற்றுபடி, இந்த நாடு மகிழ்ச்சியாக இருக்க 3 முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறுகிறார், இதை மற்ற நாடுகளும் பின்பற்றினால் அவர்கள் வாழ்விலும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என இவர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணம் தெரியுமா?
அனைவருடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே முதல் விதி, இந்த நாட்டு மக்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை கவனித்து கொள்ள சிறு வயதில் இருந்தே கற்பிக்கப்படுகிறார்கள்.
எனவே இவர்கள் அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும் என்றும் கற்பிக்கப்படுவதால், அவர்கள் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
பின்லாந்தில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் ஒவ்வொரு குடும்பமும், தங்களது அண்டை வீட்டாருடன் நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அனைத்து பிரச்சனைகளையும் வெளியில் சொல்வதனால் மனபாரம் குறைந்து மகிழ்ச்சியாக இருக்கின்றனராம். மேலும் அனைவரிடமும் அன்பாய் பழகுவதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களாம்.
இரண்டாவது காரணம் அங்கு அரசு நிறுவனங்கள் எப்போதும் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
குடி மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் அதனை உடனடியாக தீர்க்க முயற்சிப்பதால், மக்களுக்கு கவலை ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது.
மூன்றாவது காரணம் பின்லாந்தில் பொது சுகாதார அமைப்பு உள்ளது, இங்கு அதிக வருமானம் பெறுபவர்களுக்கும், குறைவான வருமானம் பெறுபவர்களுக்கும் வித்தியாசம் பார்க்கப்படுவதில்லை.
இதனால் அனைவரும் சமமாக நடத்தப்படுவதாலும் ஊழல் குறைவாக இருப்பதாலும் மக்கள் சுதந்ததிரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |