பிளாஸ்டிக் போத்தல் புற்றுநோயை ஏற்படுத்துமா? இந்த தவறை இனி செய்யாதீங்க
உடல் எப்போதும் நீரேற்றமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் பல நோய்கள் ஏற்படும்.
எனவே தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு நாளொன்றுக்கு குறைந்த பட்சம் ஆறு போத்தல் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பொதுவாகவே பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கையில் தண்ணீர் போத்தல் எடுத்து செல்வது வழக்கம்.
மிகவும் குறைந்தளவிலானோரே சில்வர், செம்பு மற்றும் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தினாலும், பெரும்பாலானோர் பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என ஆய்வு ததவல்கள் குறிப்பிடுகின்றது.
பாதக விளைவுகள்
பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் எடுத்துச் செல்வது எமக்கு இலகுவாக இருந்தாலும் இந்த பழக்கம் சுற்றுச்சூழலுக்கும் பாரிய பாதக விளைவை ஏற்படுத்துவதோடு உடலுக்கும் பாரிய தீங்கை விளைவிக்கின்றது.
பிளாஸ்டிக் போத்தல்களில் தொடர்ச்சியாக தண்ணீர் குடித்தால் இதில் காணப்படும் மைக்ரோபிளாஸ்டிக் உடலினுள் செல்கின்றது.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 5 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இது வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியாத மிக நுண்ணிய துணிக்கைகளாக இருக்கும்.
இது நீரிழிவு, உடல் பருமன், கருவுறுதல் பிரச்சினை, முன்கூட்டியே பருவமடைதல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடிப்பதால் நோயெதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படும். பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள் தண்ணீர் மூலம் உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைத்து விடும்.
பிளாஸ்டிக்கில் பித்தலேட்ஸ் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது கலக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களில் நீரை சேதித்து வைத்து பருகி வந்தால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும்.
இந்த வேதிப்பொருள்ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைத்துவிடும். மேலும் ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்தக்கூடியது.
பிளாஸ்டிக் போத்தல்களில் தொடர்ச்சியாக தண்ணீர் குடிப்பது இனப்பெருக்க ஆரோக்கியத்தில் எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்துவதோடு உயிர் கொல்லி நோயான புற்றுநோய் ஏற்படவும் பிரதான காரணமாகும். எனவே பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |