60 ஆண்டுகளாக குளிப்பதை தவிர்த்த உலகின் அழுக்கு மனிதர்! காரணம் என்ன?
பொதுவாகவே மனிதர்கள் ஒரு நாளைக்கு நிச்சயம் ஒரு தடவையாவது குளிக்க வேண்டியது அவசியம். ஆனால் ஒரு ஈரானிய நபர் சுமார் 60 ஆண்டுகள் குளிக்காமல் வாழ்ந்திருக்கிறார்.
அவர் அமோ ஹாஜி என்று அழைக்கப்பட்டார். ஈரான் நாட்டின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் வசித்து வந்த இவர், இளம் வயதில் சில மன அழுத்தங்களுக்கு ஆளான காரணத்தினால், இவ்வாறு குளிக்காமல் வாழ்ந்துவந்துள்ளார் என கூறப்படுகிறது.
ஹாஜி தனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் தான் குளிப்பதை தவிர்த்தாராம். ஈரானிய ஊடகங்களின் அறிக்கை படி, 2013-ல் அவரது வாழ்க்கையைப் பற்றி "The Strange Life of Amou Haji" என்ற தலைப்பில் ஒரு சிறு ஆவணப்படம் எடுக்கப்பட்டது குறிப்பியத்தக்கது. இது குறித்த முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |