உலகின் மிக புனிதமான 5 மலைகளைப் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்...
உலகில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல மலைகள் இருக்கின்றன. இந்த மலைகளின் இந்த சிகரங்கள் யாத்திரை மையங்களாக இருக்கிறது. அவற்றில் முக்கியமான 5 மலைகளை நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கைலாச மலை
கைலாச மலை ஆன்மீகத்தில் மிக முக்கியத்தும் கொண்ட மலையாகும். இதன் பெரும்பாலான பகுதிகள் மனிதர்களால் அடைய முடியாததாக இருக்கிறது. இந்து மதம் மற்றும் புத்த மதத்தின் நம்பிக்கைகளின்படி, கைலாச மலை மேரு மலையின் உருவகமாக விளங்குகிறது. பழங்கால குகைகள் மற்றும் மடங்கள் இங்கு இருக்கின்றன. கைலாச மலை இந்து மதத்தில் சிவபெருமானின் இருப்பிடமாக கருதப்பட்டு வருகிறது.
சினாய் மலை
இந்த மலை எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. சினாய் மலை 2285 மீட்டர் உயரம் கொண்டவை. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலைக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யாத்ரீகர்கள் வருகை தருவார்கள். இங்கு தான் இஸ்ரேலியர்களுக்கு கடவுள் விதிகள் வகுத்தார் என்று மக்களால் நம்பப்பட்டு வருகிறது.
சிகரம்
இது இந்தியாவின் இரண்டாவது உயரமான மலையாகும். இந்த மலை உத்தரகாண்டில் அமைந்துள்ள மலை சிகரம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததோடு, சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெயர் பெற்றுள்ளது. இந்த மலையை, 1988ம் ஆண்டில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அகுங் மலை
பாலி மக்களுக்கு அகுங் மலை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மலையாக திகழ்கிறது. இது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இது கிழக்கு பாலியில் 10308 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் எரிமலையும் இருக்கும்.
புஜி மலை
புஜி மலை 3776 மீட்டர் உயரத்தில் அமைந்த மலையாகும். இது ஜப்பானில் உள்ள இந்த புனித மலை, பௌத்தம் மற்றும் ஷின்டோயிசம் இரண்டிலும் புனிதமாகக் கருதப்பட்டு வருகிறது. மவுண்ட் புஜியிலும் எரிமலை இருக்கிறது. இது அக்னி தேவதை வாசம் செய்யும் இடமாக மக்களால் நம்பப்படுகிறது.