கொடுமைப்படுத்திய தந்தையிடமிருந்து நாய்க்குட்டியை காப்பாற்ற சிறுவன் செய்த செயல் - உங்கள் மனம் கனத்துவிடும்
சில நேரங்களில் நம் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நாம் மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் அந்த முடிவுகள் நம்மலால் தாங்கிக்கொள்ள முடியாது.
ஆனால், அவர்களின் நலனுக்காகவும் நல்ல எதிர்காலத்திற்காகவும் நாம் அந்த முடிவுகளை எடுக்க வேண்டி வரும். உங்கள் உயிரைப் போலவே நீங்கள் விரும்பும் நாயையும் அவருடைய நன்மைக்காக விட்டுவிட முடியுமா? அத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
மைக்கோவாகன் நகரில் காலையில் ரெஃபுகியோ சோலின் நாய் காப்பகத்தின் ஊழியர்கள் தங்கள் தினசரி வேலைக்காக பணியை தொடங்கினார்கள். அங்கு அவர்கள் தங்குமிடம் முன் தெரியாத ஒரு பெட்டியைப் பார்த்தார்கள்.
பெட்டியை பரிசோதித்த போது, அவர்கள் ஒரு சிறிய பிட்புல் குட்டி நாயை கண்டனர். இதைக் கண்டதும் அவர்களுக்கு ஆச்சரியம். 5-6 வாரங்களே ஆன பிட்புல் நாய் குட்டி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அவர்கள் எதுவும் யோசிக்காமல் அந்த நாயை காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், அந்தப் பெட்டியை பரிசோதித்து பார்க்கும்போது, மற்றொரு அற்புதமான விஷயத்தைக் கண்டனர். ஒரு கடிதம் மற்றும் ஒரு சிறிய பொம்மை. காப்பகத்தின் தொழிலாளர்கள் அந்தக் கடிதத்தை படித்தனர்.
அந்த கடிதத்தைப் படித்த பிறகுதான், நாய்க்குட்டியை ஏன் பெட்டியில் விட்டுச் சென்றதற்கான காரணம் அவர்களுக்குப் புரிந்தது.
இந்த கடிதத்தில் ஆண்ட்ரெஸ் என்ற 12 வயது சிறுவன் எழுதியிருந்தான். அச்சிறுவன் அந்த கடிதத்தில், அவனும், அவனது தாயும் அந்த நாய்க்குட்டியை மிகவும் நேசித்துள்ளனர். ஆனால், அவர்கள் நாயின் நலனுக்காக ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டியிருந்தது.
காரணம் இந்த நாய்க்குட்டி சிறுவனின் அப்பாவால் தவறாக நடத்தப்பட்டது. ஒரு நாள் அவரது தந்தை சிறிய உயிரினத்தின் வாலை சேதப்படுத்தியுள்ளார். அவர் தொடர்ந்து நாயை நோக்கி ஆக்ரோஷமாக அடித்துள்ளார்.
இதனையடுத்து, தந்தை நாயை விற்க முடிவு செய்துள்ளார். எனவே, அச்சிறுவனும், அவனது தாயும் தந்தையிடமிருந்து அந்த நாயை மறைக்க முடிவு செய்தனர். அதனால், நாயை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர்.
நாய்க்குட்டி தனிமையை உணரக்கூடாது என்பதற்காக சிறுவனுக்கு பிடித்த பொம்மைகளையும் பெட்டியில் வைத்துள்ளனர். "இங்கே ஒரு பொம்மை இருக்கிறது, அதனால் அந்த நாய்க்குட்டி எங்களை மறக்காது.
இவ்வாறு அந்த அக்கடிதத்தில் அவர்கள் எழுதியிருந்தனர். "இந்த கடிதம் மற்றும் சிறுவனின் உணர்வுகள் படித்த அனைவரின் இதயத்தையும் தொட்டது.
இறுதியில் அவர்கள் இந்த நாயைப் பாதுகாக்க முடிவு செய்தனர். எனவே, அவர்கள் அந்த நாய்க்குட்டிக்கு ரெனே என்று பெயரிட்டனர். பின்னர் அவர்கள் அந்த நாய்க்காக ஒரு அன்பான குடும்பத்தைத் தேடத் தொடங்கினர்.
அவர்கள் பேஸ்புக்கில் கதையைப் பகிர்ந்து கொண்டதால், 300க்கும் மேற்பட்டோர் அந்த நாயை தத்தெடுக்கக் கோரினர்.
