Facts: உலகின் பணக்கார நகரம் எங்குள்ளது தெரியுமா? பலரும் கணக்கிட முடியாத சொத்து மதிப்பு
பொதுவாக தற்போது உலகிலுள்ள பல நகரங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றது.
இதனை உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வைத்து அறிந்து கொள்ளலாம்.
இதன்படி, “அபுதாபி” உலகின் பணக்கார நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2024 குளோபல் SWF இன் சமீபத்திய அறிக்கையில், UAE எமிரேட் 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 142 லட்சம் கோடி) மதிப்புடன் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன என் தேடி பார்த்த போது விடையாக ஓஸ்லோ, பெய்ஜிங், சிங்கப்பூர், ரியாத் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களின் வளர்ச்சிக் காட்டப்படுகின்றது.
இந்த ஆறு நகரங்களில் உள்ள Sovereign செல்வத்தின் மொத்த மதிப்பு சுமார் 12.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ரூ. 1,000 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும். அபுதாபியின் ராயல் பிரைவேட் அலுவலகங்கள் நிர்வகிக்கும் 344 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 28 லட்சம் கோடி) இந்த1.7 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் கணக்கிடப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான அலுவலகம் அரசக் குடும்பத்தின் தனியார் முதலீடுகள் கவனித்து வருகின்றன. இந்த தனியார் சொத்துக்கள் அபுதாபியின் ஒட்டுமொத்த செல்வத்தை இன்னும் அதிகரிக்கின்றது.
அந்த வகையில் அபுதாபி பற்றி ஏனைய விடயங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
SWF என்றால் என்ன?
Sovereign Wealth Fund (SWF) எனப்படுவது அரசாங்கத்தால் நடத்தப்படும் முதலீட்டு நிதி நிறுவனத்தை குறிக்கும். இது ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யும். இதிலிருந்து வரும் லாபத்தை நாட்டின் பொருளாதார அலுவல்களுக்காக பயன்படுத்தும்.
இது போன்று மத்திய வங்கிகள் (CBக்கள்), பொது ஓய்வூதிய நிதிகள் (PPFகள்), அரச குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய குடும்ப அலுவலகங்கள் மற்றும் பல்வேறு சொத்து உரிமையாளர்களை எமிரேட் ஆகிய நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. அரச குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் அலுவலகங்கள் “ராயல் பிரைவேட் அலுவலகங்கள் (RPO)” என அழைக்கப்படுகிறது.
இதன்படி, அபுதாபியின் பொது மூலதனம் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, 2030 ஆம் ஆண்டளவில் இது 3.4 டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்கலாம்.
அபுதாபியின் முதன்மை வருமான ஆதாரம் எது?
அபுதாபி நகரத்தின் இந்த பயணம் கடந்த 1958 ஆம் ஆண்டு எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்தே அபுதாபியை ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் முதலீட்டாளராகவும் மாற்றியுள்ளது.
இன்று, அபுதாபி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எண்ணெய் இருப்புகளில் 95% மற்றும் அதன் எரிவாயு இருப்புகளில் 92% ஆகியன கைஇருப்பாக உள்ளது. அபுதாபியின் முதன்மையான வருமான ஆதாரமாக எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் செய்யப்படுகிறது. எமிரேட்ஸில் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இது தான் அபுதாபியின் முதன்மையான வணிகமாக உள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி உள்நாட்டு உற்பத்தியில் பெரிதும் பங்களிப்பு செய்கின்றன. இதிலிருந்து வரும் லாபம் அத்தியாவசிய உள்கட்டமைப்பு திட்டங்கள், பொது சேவைகள் மற்றும் பொருளாதார தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |