உலகின் மிகவும் ஆபத்தான பகுதி எது தெரியுமா? அதுவும் கடலுக்கு நடுவே மலையின் உச்சியில்
நாம் வாழும் உலகில் எத்தனையோ மர்மம் நிறைந்த பகுதியில் ஆபத்தான பகுதிகள் இருக்கின்றன.
ஆனால் அவற்றைவிடவும் திகிலூட்டக்கூடியது Thridrangaviti lighthouse.
அட்லாண்டிக் பெருங்கடலின் பாரிய பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கமே இதுவாகும்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 40 மீற்றர் தொலையில் அதாவது 130 அடி உயரத்தில் பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு செல்வதற்கு பிரத்யேகமான பாதை எதுவும் கிடையாது, ஹெலிகொப்டர் பயணத்தின் மூலம் மட்டுமே செல்லலாம் அல்லது பிரம்மாண்டமான பாறையை கடந்து செல்ல வேண்டும்.
அதுவும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல, மிக கூர்மையான முனைகள் இருப்பதால் உயிருக்கே ஆபத்தாகலாம் என்பதால் தான் மிகவும் ஆபத்தான பகுதி என குறிப்பிடப்படுகிறது.
யாரால் கட்டப்பட்டது?
1938லிருந்து 1939ம் ஆண்டு காலகட்டத்தில் திறமையான மலையேற்று வீரர்கள் இது கட்டப்பட்டது, அனுபவம் வாய்ந்த மலையேற்று வீரர்கள் கட்டுமான பொருட்களை சிகரத்துக்கு கொண்டு சென்று வெற்றிகரமாக கலங்கரை விளக்கத்தை கட்டி முடித்தனர்.
1950ம் ஆண்டுகளில் பாறையின் மீது ஹெலிபேட் அமைக்கப்பட்டது, இதற்கு முன்னரான ஆண்டுகளில் பாறையின் மீது ஏறியே கலங்கரை விளக்கத்தை அடைய முடியும்.
இதன் காரணமாகவே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கலங்கரை விளக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
1990ம் ஆண்டுகளில் சூரிய சக்தியில் இயங்கும் கலங்கரை விளக்கமாக மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
