உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் எங்கு உள்ளது தெரியுமா?
பொதுவாக சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் ரூபிக்ஸ் க்யூப் இல்லாமல் இருக்காது.
சிறுவயதில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொருட்களில் ரூபிக்ஸ் க்யூப்பும் ஒன்று. பார்ப்பதற்கு வண்ணமயமான 3D புதிர் விளையாட்டுப் பொருளாக இருக்கும் இதனை ஒழுங்கமைப்பது பெரிய சவாலான விடயமாகும்.
கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை உலகில் உள்ள பல இடங்களில் பிரபலமாக உள்ளது.
குழந்தைகளின் அறிவு, பொறுமை, சாமர்த்தியம், மனசுறுசுறுப்பு ஆகியவற்றில் பக்குவம் சொல்லிக் கொடுக்கும் புதிராகவே பெற்றோர்கள் இதனை பார்க்கிறார்கள்.
சிக்கலைத் தீர்ப்பது, விடாமுயற்சி மற்றும் சவால்களுக்கு முகங் கொடுத்தல் உள்ளிட்ட நற்பண்புகளை வளர்க்க இது உதவியாக இருப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ரூபிக்ஸ் க்யூப்பை அனைவரும் விளையாடலாம்.

அந்த வகையில், அதிகமான எடை கொண்ட ரூபிக்ஸ் க்யூப் எங்குள்ளது என்ற விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
ஏன் இவ்வளவு சுவாரஸ்யமானது ரூபிக்ஸ் க்யூப்?
கடந்த 1974 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரைச் சேர்ந்த கட்டிடக்கலை கலைஞரும் பேராசிரியருமான எர்னோ ரூபிக் என்பவரால் ரூபிக்ஸ் க்யூப் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்ப காலங்களில் எர்னோ ரூபிக் மாணவர்களுக்கு சிக்கலானது என்பதை தெரிந்த கொண்ட பின்னர், இவர் இதனை ரூபிக்ஸ் க்யூப்பாக மாற்றியுள்ளார். கடந்த 1975 ஆம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் 'மேஜிக் க்யூப்' என்ற பெயரில் அறிமுகமாகியது.
அதன் பின்னர், கடைகளில் விற்பனையாக ஆரம்பித்துள்ளது. இதனை கவனித்த ஐடியல் டாய் கார்ப்பரேஷன் என்ற பொம்மை உற்பத்தியாளர் இதனை ’ரூபிக்ஸ் கியூப்’ என்ற பெயரில் சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறார்.

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் ரூபிக்ஸ் கியூப் Toy of the Year-ஆக தெரிவு செய்யப்பட்டது.
உலகிலேயே பெரியது எங்குள்ளது?
அறிமுகமாகி ஒரு ஆண்டுக்கு பின்னர் பின்லாந்து, ஸ்வீடன், இத்தாலி நாடுகளும் Toy of the Year-ஆக அங்கீகாரம் கொடுத்தது. ஆனாலும், ரூபிக்ஸ் க்யூப் புதிரை தீர்க்க கண்டுபிடித்தவருக்கே ஒரு மாதக்கலாமாகியுள்ளது.
உலகெங்கும் இதுவரையில் 40 கோடிக்கு அதிகமான ரூபிக்ஸ் க்யூப்கள் விற்பனை ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் அமெரிக்க நாட்டில் Knoxville என்ற உள்ளது. இதன் எடை 500 கிலோ இருக்கும் எனக் கூறப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |