1 வாழைப்பழம் ரூ.565க்கு விற்பனை செய்யும் விமான நிலையம் எங்குள்ளது தெரியுமா?
உலகிலுள்ள மிகப்பெரிய விமான நிலையம் மற்றும் மிகச் சிறய விமான நிலையம் பற்றி அறிந்திருப்போம். மாறாக விலையுயர்ந்த பொருட்கள் கொண்ட விமான நிலையங்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
வழக்கமாக நாம் கடைகளில் வாங்கும் விலையை விட விமான நிலையங்கள் உள்ளே விற்கப்படும் பொருட்களின் விலை சற்று அதிகமாக தான் இருக்கும். விலையுயர்ந்த விமான நிலையங்களில் விற்கப்படும் பொருட்களின் விலையில் சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலை இருக்கும்.
அந்த வகையில், பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விமான நிலையம் எங்குள்ளது? என்றும் அதிலுள்ள பொருட்களின் விலை விவரங்கள் என்ன? என்பது பற்றியும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
விமான நிலையம் எது?
கம்பீரமான கட்டடக்கலை முதல் உயர்தர சேவைகள் வரை, பெயர் பெற்ற விமான நிலையம் தான் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையம்.
இங்கு பிரபலமான உணவகங்கள் முதல் சிறிய கஃபேக்கள் வரை என அனைத்து உணவகங்களிலும் விதவிதமான உணவுகள் பயணிகளை கவர்ந்தாலும், அந்த உணவுகளின் விலை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
இங்கு உணவு மற்றும் பிற பானங்களின் அதிக விலை காரணமாக இது “உலகின் மிகவும் விலையுயர்ந்த விமான நிலையம்” என அழைக்கப்படுகிறது.
ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,20,000 பயணிகள் வருகை தருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக உணவு மற்றும் பானத்தைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் விலை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் கருதுகின்றனர்.
விலை பட்டியல்
- 1 பீர்- £15 (சுமார் ரூ.1,698)
- 1 வாழைப்பழம்- £5 (தோராயமாக ரூ.565)
- பிரபல லாசக்னா 90 கிராம்- £21 (ரூ.2,376)
- சுவையான குரோசண்ட்களின் விலை- £12.50 (ரூ.1,410) முதல் £15 (ரூ.1,698)
- இத்தாலிய சிக்கன் சாலடுகளின் விலை- £15 (ரூ.1,698)
- மெக்டொனால்ட்ஸில் 1 பிக் மேக் மற்றும் டபுள் குவாட்டர் பவுண்டரின் விலை - £18.35 (சுமார் ரூ.2,000) மற்றும் £21.65 (தோராயமாக ரூ.2,450)
- போப்யேஸில் 4 வறுத்த சிக்கன் விங்ஸ், பிரஞ்சு ஃப்ரைஸ் மற்றும் ஒரு கோகோ கோலா- £15 (ரூ.1,698)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
