முகேஷ் அம்பானிக்கு அவர் அப்பா விட்டு சென்ற சொத்து எவ்வளவு தெரியுமா?
தற்போது ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் தான் முகேஷ் அம்பானி.
இவர், இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக மாறியதற்கு பின்னால் அவருடைய உழைப்பும், திறமையும் அடிப்படையாக இருந்தாலும், அதற்கு முக்கியப் புள்ளியாக இருந்தவர் அவருடைய தந்தை திருபாய் அம்பானி.
குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த திருபாய் இந்தியாவின் வணிக உலகின் ராஜாவாக உச்சத்தை அடைந்த பயணம் எப்படி என பலருக்கும் தெரிந்திருக்கும். வறுமையில் அடிப்பட்டு திருபாய் அம்பானி தன்னுடைய மெட்ரிகுலேஷன் படிப்பை நிறுத்தி விட்டு, ஏமனுக்கு குடிபெயர்ந்து அங்கு ஒரு பெட்ரோல் பம்பில் வேலை செய்தார்.
அதன் பின்னர் இந்தியாவுக்கு திரும்பிய அவர், மும்பையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி ரிலையன்ஸ் என்னும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் அவர் ஜவுளித் தொழிலில் இறங்கினார். தொலைநோக்குப் பார்வை மற்றும் விடாமுயற்சியுடன் செயற்பட்ட திருபாய் அம்பானி பெட்ரோ கெமிக்கல்ஸ், பெட்ரோல் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு என பல தொழில்களில் வெற்றி கொடி நாட்டி, “ரிலையன்ஸ்” என்ற பெரிய நிறுவனத்தை உருவாக்கினார்.
அதன் பின்னர் சேர்ந்து சொத்துக்கள் தான் முகேஷ் அம்பானிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படி அவர்களின் வரலாற்றை தேடும் பொழுது திருபாய் அம்பானி இறக்கும் பொழுது அவருடைய மகன்களுக்கு எவ்வளவு சொத்துக்களை விட்டுச் சென்றார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
திருபாய் அம்பானியின் சொத்து மதிப்பு
திருபாய் இறக்கும் போது முறையான உயில் எழுதப்பட்டிருக்கவில்லை. ஏனெனின் அப்போது அவர்களின் சொத்துக்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் தெளிவான தொகையை வெளியில் கூற முடியாத நிலை இருந்துள்ளது.
அதன் பின்னர், அவருடைய மகன்களான முகேஷ் மற்றும் அனில் அம்பானி இடையே ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை கடந்த 2005 இல் பிரிப்பதற்கு அவருடைய தாயார் கோகிலாபென் அம்பானி உதவி செய்துள்ளார்.
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார், அதில் எண்ணெய், எரிவாயு, பெட்ரோ கெமிக்கல்ஸ், பின்னர் தொலைத்தொடர்பு ஆகியன உள்ளடங்கியது.
அதே போன்று அவருடைய சகோதரர் அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் பவர் மற்றும் பிற நிறுவனங்களை எடுத்துக் கொண்டார். இவர்களில் தற்போது முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார், அவரது நிகர மதிப்பு 8 லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கின்றன.
மாறாக அவரின் சகோதரர் அனிலின் வியாபார பயணம் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை கண்டு வருவதால் சொத்து மதிப்பு கொஞ்சம் குறைவாகவே உள்ளது.
திருபாய் அம்பானி விட்டுச் சென்ற சொத்து விவரங்கள்
திருபாய் அம்பானி ஆரம்ப காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு இறக்கும் பொழுது அவரின் வியாபாரங்கள் உச்சத்தில் இருந்தன. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, திருபாய் அம்பானி இறக்கும் தருவாயில் உலகின் 138வது பணக்காரராக இருந்தார், அவரது தனிப்பட்ட நிகர மதிப்பு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக என கணக்கிடப்பட்டுள்ளது.
இன்றைய மதிப்பீட்டின் படி, ரூ. 24,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும். ஆனால் அவர் விட்டுச் சென்ற செல்வம் வெறும் பணத்தை விட அதிகமாக இருந்தன.
கடந்த 1950-களின் பிற்பகுதியில் மும்பையில் ஒரு சிறிய அறையில் இருந்து தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனம் திருபாய் இறக்கும் பொழுது அதன் மதிப்பு சுமார் ரூ. 60,000 கோடியாக மதிப்பிடப்பட்டது.
தற்போது உள்ள நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 17.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
