உலகின் அழமான, ஆபத்தான பள்ளம் கண்டுப்பிடிப்பு: எங்கு தெரியுமா?
கடலின் அடிப்பகுதியைப் பற்றி நாம் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. கடலானது தனக்கென எப்போது அழகையும் ஆபத்தையும் வைத்துக்கொண்டு தான் இருக்கும் அலைகள் அழகென்றால் அதன் ஆழமும் ஆபத்து தான்.
அந்தவகையில் 900 அடி ஆழமுள்ள அந்த ராட்சத பள்ளம் ஒன்று மெக்சிகோவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளமான ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மெக்சிகோவில் யுகேதான் தீபகற்பத்தில் உள்ள செத்துமல் வளைகுடாவில் காணப்படும் இந்த ராட்சத பள்ளம் அடர் நீல நிறத்தில் உள்ளது.
மேலும் இந்தப் பள்ளம் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது ஏன் தெரியுமா?
இந்தப் பள்ளம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ராட்சத பள்ளங்களில் ஆக்சிஜன் குறைவு. எனவே, சுற்றுலா பயணிகள் வழிதவறி நீந்திச்சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
தாவரங்கள் மற்றும் அவற்றின் இலைகள் காலப்போக்கில் அழுகி உருவாகும் பக்டீரியாக்களால் அடர் நீல நிறம் உருவாவதாகவும், அதற்குள் வெளிச்சம் புகாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதைவிட பெரிய ராட்சத பள்ளம் ஒன்று இதற்கு முன் தென் சீன கடல் பகுதியில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.