2 வருடமாக வயிற்று வலியால் துடிதுடித்த பெண்.. காப்பாற்றி உலக சாதனை படைத்த மருத்துவர்கள்!
பெண்ணின் கருப்பையில் இருந்து 122 கிலோ நீர்க்கட்டிகளை அகற்றி பெங்களூரு உள்ள சக்ரா உலக மருத்துவமனை சாதனை படைத்ததுள்ளது.
தொலைக்காட்சி முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர், மற்றும் செய்தியாளரான ரித்திகா ஆச்சார்யா(34) கடந்த செப்டம்பர் மாதம் இவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது, அவர் மிகவும் ஊட்டச்சத்துக் குறைந்து, 2 ஆண்டுகளாக மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னைகளோடு இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி, அவரது வயிறு 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளது.
இவரைக் கண்ட பலரும் நீர்க்கட்டி என தெரியாமல் கேள்வி கேட்க மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
இதையடுத்து, ரித்திகாவின் கருப்பையில் அறுவை சிகிச்சை மூலம் 2.5 கிலோ எடை கொண்ட 222 நீர்க்கட்டிகள் அகற்றப்பட்டன.
மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னைதான், ஆனால் பலருக்கும் இதில் அறுவை சிகிச்சை தேவைப்படாது.
ஆனால், இவருக்கு நீர்க்கட்டிகள் பெரிய அளவில் வளர்ந்து கிட்டத்தட்ட ஒரு காளிபிளவர் போல காணப்பட்டது.
இதனால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு சாதனை படைத்ததுள்ளது சக்கரா மருத்துவமனை.