மகனுடன் 2 கி.மீற்றர் ஓடி வந்த தாய்! நெகிழ வைத்த பாசத்தின் வைரல் புகைப்படம்
இந்திய மாநிலமான தமிழகத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் ஸ்கேட்டிங் சென்று கொண்டே சிலம்பம் செய்துள்ள நிலையில், அவரது அம்மா செய்த காரியம் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.
ஸ்கேட்டிங் உடன் சிலம்பம்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அஸ்வின். 5ம் வகுப்பு பயின்று வரும் இந்த சிறுவன், இரண்டு கிலோ மீற்றர் தூரம் கைகளால் சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்துள்ளார்.
சவாலான ஸ்கேட்டிங்கை ஒருபுறம் கவனித்துக் கொண்டு மறுபுறம் மனதை ஒருநிலைப்படுத்தி சிலம்பத்தின் பல்வேறு வரிசைகளை செய்து காட்டியபடி சாதனை செய்துள்ளான்.
குறித்த சிறுவனின் ஸ்கேட்டிங் வேகத்தில் ஈடு கொடுத்து 2 கிலோ மீற்றர் தூரம் வரை ஓடி கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளார் அவரது தாய்.
குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும் மகனை ஆரத் தழுவி பாராட்டிய தாய், மூச்சு வாங்க கீழே அமர்ந்து பின்பு பழைய நிலைக்கு வந்துள்ளார். தாயின் பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.