சாதனைக்காக ஏலியனாக மாறிய ஜோடி! தலை முதல் பாதம் வரை இப்படியா?
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க தம்பதிகள் இருவர் தங்களை ஏலியன் போன்று மாற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கின்னஸ் சாதனை
இன்று கின்னஸ் சாதனையில் தங்களது பெயர் இடம்பெற வேண்டும் என்று தம்பதிகள் பலரும், பல வினோதமான செயல்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அர்ஜென்டினாவில் வசிக்கும் கேப்ரியேலா பெரால்டா மற்றும் விக்டர் ஹ்யூகோ பெரால்டா என்ற தம்பதிகள், அதிகமான உடல் மாற்றங்களை செய்து சாதனை செய்துள்ளனர்.
பச்சை குத்துவது மட்டுமின்றி இந்த ஜோடிகள் தங்களது உடம்பில் 98 மாற்றங்களை செய்துள்ளார்களாம். கண்களில் பச்சை குத்தியிருக்கும் இவர்கள், உடம்பில் 50 இடங்களில் துளையிட்டு ஸ்டெட் போட்டுள்ளனர்.
இதுக்குறித்த வீடியோவில், 8 மைக்ரோடெர்மல், 14 உடல் உள்வைப்புகள், 5 பல் உள்வைப்புகள், காதுகள் தொடர்பான 4 அறுவை சிகிச்சைகள், 2 காது போல்ட் மற்றும் நாக்கு ஆகியவைகளில் மாற்றம் செய்துள்ளதையும் காணமுடிகின்றது.
வெளியில் பெரும்பாலான மக்கள் இவர்களைக் கண்டு அச்சம் கொண்டு வருகின்றனராம்.