உலகத் தாய்மொழி நாள்: இன்றுடன் முடியும் தாய்மொழிக்கல்விக்கான $15 சலுகை
Uchchi.com, வலைத்தளத்தில் தமிழ்க்கல்விக்காக IBC தமிழ் ஊடகக் குழுமம் வழங்கும் 50% விலைச்சலுகையைப் பெறுவதற்கான இறுதி நாள் இன்றாகும்.
இன்று உலகத் தாய்மொழி நாளாகும். முதுபெரும் மொழியான தமிழ், தலைமுறைகள் தாண்டியும் செழித்து வாழ வகைசெய்ய வேண்டிய பொறுப்பை நாம் அனைவரும் சிந்தையில் இருத்த வேண்டிய நாளாகும்.
உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு ஐபிசி தமிழ் ஊடகக் குழுமம் புலமைப்பரிசில் ஒன்றை அறிவித்திருந்தது.
‘உச்சி’ வலைத்தளத்தில் உள்ள தமிழ்மொழி சார் கற்கை நெறிகளில் இன்று இணைவோருக்கு ஆண்டுக் கட்டணத்தின் பாதித்தொகையை ($15) ஐபிசி தமிழ் செலுத்த முன்வந்துள்ளது.
முதுபெரும் மொழியான தமிழ்
Uchchi.com வலைத்தளத்தில் ibc50 என்ற விலைக்கழிவுக் கூப்பனைப் பயன்படுத்தி இந்தச் சலுகையை இன்றிரவு வரை பெற்றுக்கொள்ளலாம்.
“உச்சியின் கற்கை நெறியொன்றில் ஐபிசி தமிழின் புலமைப்பரிசிலைப் பயன்படுத்தி ஒருவர் இன்று இணையும்போது அவர் செலுத்தும் ஆண்டுக்கட்டணம் $15 ஆகக் குறைகிறது. பன்னிரண்டு மாதங்கள் எல்லா நாளும் விருப்பமான நேரத்தில் கற்கக்கூடிய வசதி உச்சி வலைத்தளத்தில் உள்ளது.
பாடங்கள் காணொளிகளாக உள்ளன (video lessons). அப்படிப்பார்த்தால் தமிழ்க்கல்விக்காக அவர் செலவிடும் மாதத்தொகை $1 ½ மட்டுமே. புலம்பெயர் நாடுகளில் உணவகங்களில் ஒரு கோப்பைத் தேனீர் வாங்கும் செலவை விட இது குறைவானதாகும்.
எனவே இந்த நல்வாய்ப்பை உலகத் தமிழர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று உச்சி வலைத்தளத்தின் பணிப்பாளர் பாவலர் மதுரத் தமிழவேள் தெரிவித்தார்.
“நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் - வீட்டில் இருந்தே ஒருவர் தமிழையும் கலைகளையும் கற்கக்கூடிய வகையில் – உச்சி வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரியோர், சிறுவர்கள் அனைவரும் இதன்மூலம் பயன் பெறலாம். தங்கள் பிள்ளைகள் தமிழை மறந்து விடுவார்களோ என்று கவலையுற்றிருக்கும் பெற்றொர் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அரிய வாய்ப்பு இது” என்றும் அவர் தெரிவித்தார்.
ibc50 என்ற கூப்பனைப் பயன்படுத்திப் பின்வரும் கற்கை நெறிகளுக்கு $15 விலைக்கழிவை நீங்கள் பெறலாம். இன்று மட்டுமே இந்தச் சலுகை. (மேலதிக தகவல் தேவையானோர் ‘உச்சி’ வாடிக்கையாளர் பிரிவை வலைத்தளத்தின் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்) :
நீங்களும் பாடலாசிரியர் ஆகலாம், மரபுக்கவிதை எழுதலாம்