கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற உலகின் மிகப்பெரிய டீ சர்ட்!
எதையாவது செய்து எப்படியாவது கின்னஸ் சாதனை படைத்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.
அந்த வகையில் ரெமேனியா நாட்டில் புதிய கின்னஸ் சாதனையொன்று படைக்கப்பட்டுள்ளது.
ரொமேனியா நாட்டில் 357 அடி நீளம் 241 அடி அகலம் கொண்ட ஒரு டீசர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
image - twitter
இந்த டீ சர்ட் ஆனது, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் போத்தல்களிலிருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது அந்நாட்டின் தேசியக் கொடியின் நிறத்தில் மறுசுழற்சியை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்ப்பட்டுள்ளது.
உலக சாதனையில் இடம்பெற்றுள்ள இந்த டி சர்ட்டின் துணியால் சுமார் பத்தாயிரம் ஆடைகள் செய்து ஏழை குழந்தைகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.