வெறும் 1 ரூபாயில் புத்தம் புதிய ஆடைகள்: எங்கு கிடைக்கும்? நெஞ்சை உருக்கும் உண்மை
இந்திய திருநாடு ஒருபுறம் தொழில்நுட்ப ரீதியாக நாம் வளர்ந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறிப்பாக கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வர அரசாங்கம் பல முயற்சிகள் எடுத்தாலும், தங்களது வாழ்வாதாரத்தையே இழந்து தவிப்பவர்கள் ஏராளம்.
உண்ண உணவு, உடுத்த உடை, தங்க இருப்பிடம் என அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பலரும் கலங்கி நிற்கின்றனர்.
அவர்களின் தேவையை நிறைவேற்றுகின்றனர், பெங்களூரை சேர்ந்த நண்பர்கள் நால்வர்.
ஏழை எளிய மக்களுக்கு ஷாப்பிங் அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக மிக குறைந்த விலையில், அதாவது ரூ.1க்கு ஆடைகளை வழங்கி வருகின்றனர்.
Melisha Noronha, Vinod Prem Lobo, Nitin Kumar மற்றும் Vignesh இவர்கள் தொடங்கியுள்ள ”Imagine Clothes Bank”-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
A Community Clothes Bank for the Poor in #Bengaluru.. Clothes Bank for the underprivileged is unveiled in Electronics City. A 700-sq-ft boutique is open on Sundays where the needy can pick any piece of clothing for just ₹ 1.. pic.twitter.com/m6DyR68ty2
— Madhu (@Sudhana2302) October 29, 2021
வெறும் ஞாயிற்றுகிழமைகளில் மட்டுமே செயல்படும் இந்த கடைக்கு, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வந்த தங்களது ஆடைகளை தேர்வு செய்து எடுத்துச் செல்கிறார்களாம்.
2002ம் ஆண்டே இவர்களது சமூக சேவை தொடங்கிவிட்டதாம், தாங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, பள்ளி தோழர்களின் பழைய ஆடைகளை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு வழங்குவது வழக்கமாம்.
படித்து முடித்து வேலைக்கு சென்ற பின்னரும், குறிப்பாக மக்கள் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படுவதை பார்த்து புதிய கடையை திறந்துள்ளனர்.
தங்களுக்கு தேவையான ஆடையை தாங்களே தேர்வு செய்து கொள்ளும் பொருட்டு இதை உருவாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர்.