S என்ற எழுத்தில் பெயர் உடைய நபர்களின் குணாதிசயங்கள் இப்படிதான் இருக்குமாம்.. நீங்களும் இப்படியானு பாருங்க!
S என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டவர்களின் குணாதிசயம், மிகவும் அற்புதமாக தான் இருக்கப் போகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், தங்களுடைய குடும்பத்தை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதில் அதிக கவனத்தை செலுத்துவார்கள்.
உறவுகளுக்குள் சண்டை ஏற்பட்டாலும், முதலில் விட்டுக்கொடுப்பவர்கள் இவர்கள் ஆகத்தான் இருக்க முடியும். முடிந்தவரை இவர்களது கோபத்தையும், சந்தோஷத்தையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.
உயரிய லட்சியம் கொண்ட இவர்களை, எவராலும் சுலபமாக புரிந்து கொள்ள முடியாது. காரணம், இவர்களது மனம் மிகவும் அழுத்தம் கொண்டது என்பதால் தான். இதனால் தான், இவர்கள் பெரும்பாலும் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள்.
தலைமைப் பொறுப்பு வகிப்பவர்கள் அதிகமாகப் பேசமாட்டார்கள், அழுத்தத்தோடு இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எவ்வளவுதான் பொறுமையான குணம் கொண்டவர்களாக இருந்தாலும் இவர்கள், சுலபமாக உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள்.
உதவி என்று யார் வந்து கேட்டாலும், மறுக்காமல் செய்யும் மனம் கொண்டவர்கள் இவர்கள். எந்தவொரு செயல்பாட்டையும் வாயில் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். செயல்பாட்டில் செய்து காட்டும் குணம் இவர்களிடம் உள்ளது.
அதிபுத்திசாலியாக இருக்கும் இவர்கள் பெரிய பதவியில் இருந்தாலும் கூட, அந்த பதவியை வைத்துக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவி செய்யத் தான் பார்ப்பார்களே தவிர, அந்த பதவியை தவறாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
நேர்மை குணம் கொண்டவர்கள். தங்களிடம் பணம் காசு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதை வைத்து அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணமும் இவர்களிடம் தாராளமாகவே இருக்கும்.
அழகான தோற்றத்தைக் கொண்ட இவர்களது மனம் மிகவும் சுத்தமானதாகவும், அழகானதாகவும் தான் இருக்கும். எந்த ஒரு பொறாமை குணமும் இவர்களிடம் இருக்காது.
மற்றவர்களுடைய தோல்வியின் மூலம், இவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றால் அந்த வெற்றியை கட்டாயம் இவர்கள் விரும்ப மாட்டார்கள்.
எல்லோராலும் விரும்பி, பழககக்கூடிய, உடலமைப்பும், மன அமைப்பும் கொண்டவர்கள் தான் இவர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.