10 நிமிடங்களில் வெள்ளி கொலுசை பளபளப்பாக்குவது எப்படி? வாங்க பார்க்கலாம்
பொதுவாக நாம் ஆபரணங்களாக பயன்படுத்தும் வெள்ளி, தங்கம் மற்றும் வைரம் என்பவற்றை சாதாரணமான தண்ணீரீலோ அல்லது சவவைப் பொருட்களை வைத்தோ பாலிஷ் செய்ய முடியாது.
அன்றாடம் நாம் அணியும் வெள்ளி மற்றும் தங்க நகைகள் சில காலங்களில் அதிலுள்ள பளபளப்பு நிலையிலிருந்து மாறி மங்கலடைய ஆரம்பிக்கும். இதணை மீண்டும் பளபளப்பாக்க சாதாரண சவலைப் பொருட்களுக்கு முடியாது.
ஆம், ஏனெனில் இதிலிருக்கும் சில கழிவுகள் இலகுவில் அகற்ற முடியாது, எனவே தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை சில முலிகை மற்றும் இராசயனத் திரவங்களைக் கொண்டு பாலிஷ் செய்தால் மாத்திரமே பளபள வைக்க முடியும்.
அந்த வகையில் நாம் கால்களில் அணியும் வெள்ளி கொலுசுகள் நிறத்திலோ அல்லது பளபளப்பு தன்மையிலோ மங்கலடைந்து விட்டால் என்ன செய்யலாம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் - தேவையான அளவு
அப்பச்சோடா - 1 ஸ்பூன்
தேயிலைத்தூள் - தேவையான அளவு
சலவைத்தூள் - 1 ஸ்பூன்
பாலிஷ் செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு தேயிலைச்சாற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்னர் இரண்டு கப் சூடு தண்ணீரில் அப்பச்சோடா ஒரு ஸ்பூன், சலவைத்தூள் ஸ்பூன் மற்றும் தேயிலைச்சாறு என்பவற்றை ஒன்றாக கலந்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
தொடர்ந்து நன்றாக கொதித்த நீரில் கொலுசுகளை போட்டு நன்றாக ஒரு தூரிகையை பயன்படுத்தி தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் கொலுசுகள் பளபளப்பாகும்.