International Women's Day: உலக வாழ் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்
இன்று மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிர் வாழ்த்து
உலக வாழ் பெண்கள் மகளிர் தினம் கொண்டாடும் நாளாக இன்றைய நாள் அமைகிறது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் பெண்ணின் பங்களிப்பு இருக்கும்.
நூற்றாண்டுகளாக சமூகத்தின் கட்டமைப்பில் பெரும் பங்காற்றும் பெண்களை நாம் வாழ்த்தி கொண்டாட தவறியிருக்கிறோம்.உலகளவில் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படும் சர்வதேச மகளிர் தினம் பாலின பாகுபாடின்றி பெண்களை நடத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துக்கிறது.
தாய், தங்கை, தோழி, மகள், காதலி, மனைவி என ஒவ்வொரு வடிவிலும் பெண் நம்மோடு பயணிக்கிறாள்.
சர்வதேச மகளிர் தினத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் பெண்ணை பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம். இந்த வாசகத்திற்கு அமைவாக நடிகர் விஜய் தற்போது மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
