பெண்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றும் 3 உணவுகள்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பெண்கள் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை.
இவ்வாறு அயராது உழைப்பதால் அதிகமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள், இதன் காரணமாக அடிக்கடி உடல் நிலை கோளாறு ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
பெண்களின் வயது அதிகரிக்கும் போது, தசை பலவீனம், ரத்த அழுத்தம், கால்சியம் குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அந்த வகையில் சில ஆரோக்கியமான உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அப்படியான உணவுகள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
1. நெல்லிக்காய்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆற்றல் நெல்லிக்காயிற்கு அதிகமாகவுள்ளது. இதிலிருக்கும் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. அத்துடன் சிறந்த இரும்பு உறிஞ்சுதலுக்கு உதவியாகவும் இருக்கின்றது.
2. பேரீச்சை
பெண்களின் ஆரோக்கியத்திற்கு பேரீச்சம்பழம் பெறும் உதவியாக இருக்கின்றது. இதிலிருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாகின்றது. அத்துடன்பேரீச்சையிலிருக்கும் இரும்புச்சத்து இரத்த சோகையை எதிர்த்துப் போராடுகிறது, அதே நேரத்தில் அவற்றின் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
3. எள் விதைகள்
பொதுவாக பெண்கள் அதிகமாக உணவில் எள் விதைகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். இதிலிருக்கும் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றது. இரத்த சோகையை எதிர்த்து வயதான எதிர்ப்பு நன்மைகளை வழங்குகின்றன. மேலும் லிக்னான்களின் இருப்பு ஹார்மோன் சமநிலைக்கு பங்களிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |