மனைவிக்கு 'இத' மட்டும் பண்ணுங்க.. வாழ்க்கை முழுவதும் சண்டையே இருக்காது!
ஒரு காதல் உறவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவ்வளவு இலகுவான விடயமல்ல.
சில சமயங்களில் ஒரு உறவில் சிறிய செயல்கள் கூட பெரிய அர்த்தம் கொண்டிருக்கும். அதிலிருக்கும் ஆழமான தொடர்புகள் உறவில் பாரிய தாக்கம் செலுத்தும்.
பெண்கள் தங்கள் உணர்வுகளை மதிப்புக்கும் ஆண்களை அதிகமாக விரும்புவார்கள். அதே சமயம், ஆணின் குணங்கள் கொஞ்சம் மென்மையானதாக இருந்தாலும் பெண்களால் அதிகமாக விரும்பப்படுவார்கள்.
எப்போதும் ஆடம்பரமான பரிசுகளால் மாத்திரம் காதல் உறவு சிறப்பாக இருப்பதில்லை. மாறாக சில நேரங்களில் யதார்த்தமாக நடக்கும் சிறு செயல் கூட காதல் வாழ்க்கையை ஆழமானதாக மாற்றும்.
அந்த வகையில், திருமணமான பெண்கள் மற்றும் காதலிக்கும் பெண்கள் ஒரு ஆணிடம் எதிர்ப்பார்க்கும் விடயங்கள் என்னென்ன என்பதனை தெரிந்து கொள்வோம்.
காதல் உறவை மேம்படுத்தும் டிப்ஸ்
1. ஸ்மார்ட்போன்கள் மற்றும் கவனச்சிதறல்கள் அதிகமாக இருக்கும் தற்போதைய நிலையில், ஒரு ஆண் தன்னுடைய துணை கூற வருவதை கவனித்தாலே போதும். அது அவர்களின் காதல் வாழ்க்கையை உறுதிப்படுத்தும். எப்போதும் உங்கள் துணையிடம் மனம் விட்டு பேச வேண்டும். இது உங்களின் உறவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
2. ஆச்சரியமான பரிசுகள் எப்போதும் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அர்த்தமுள்ளதாகவே இருக்க வேண்டும். சிலர் பிஸியான நாட்களுக்கு நடுவில் அனுப்பும் மெசேஜ் போன்ற தூரத்தில் இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் பரிசுகள் காதலை ஞாபகப்படுத்தும்.
3. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருக்கும் ஜோடிகளுக்கு உணர்வுரீதியான நெருக்கம் அவசியம். ஆறுதல், அரவணைப்பு மற்றும் தொடர்பை அதிகப்படுத்தும் செயன்முறையாக இது பார்க்கப்படுகிறது. கை பிடித்தல், தலைமுடியை கோதுதல், அன்பான அணைப்பு உங்களின் காதலை இன்னும் அதிகப்படுத்தும்.
4. ஆண்கள் பெரிதாக பெண்களின் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களின் கனவுகளுக்காக அவர்கள் ஊக்கப்படுத்தும் பொழுது உங்களின் துணையை உங்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. ஆண் பெண்ணின் வாழ்க்கையில் ஊக்குவிப்பாளராகவும் இருக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
5. ஒரு ஆரோக்கியமான உறவில் தனிமைக்கு இடம் இருக்காது. எப்போதும் தங்களின் தேவைகளை மாத்திரம் பார்க்காமல் துணையின் தேவைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் சுதந்திரம் கொடுப்பதற்கான துணிச்சல் வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
