Gold Anklet: பெண்கள் தங்கத்தில் கொலுசு, மெட்டி அணியக்கூடாது ஏன்?
இந்து மத நம்பிக்கையின் படி, பெண்கள் காலில் தங்க கொலுசு மற்றும் மெட்டி அணிவது தவறு என்று கூறப்படுகின்றது. அது ஏன் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பெண்களுக்கு தங்கம் என்றாலே அலாதி பிரியம் என்று தான் கூற வேண்டும். என்னதான் விதவிதமாக தங்கத்தில் நகை வைத்திருந்தாலும், புதிய நகைகளை வாங்கி குவிக்கவும் செய்வார்கள்.
ஆனால் தங்கத்தினை காலில் கொலுசாகவோ அல்லது மெட்டியாகவோ அணிவது கூடாது.
தங்கத்தினை ஏன் காலில் அணிவதில்லை?
இந்து மதத்தில் தங்க நகைகளை அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுவதால், தங்க கொலுசு மற்றும் மெட்டியை காலில் அணிவது நல்லதாகக் கருதப்படுவதில்லை.
ஜோதிட நம்பிக்கையின் படி, தங்க நகைகள் லட்சுமியின் அடையாளமாக கருதப்படுகின்றது. ஆதலால் தங்கத்தினை காலில் இந்த அணிகலன்களாக அணியக்கூடாது.
அவ்வாறு அணிந்தால் லட்சுமி தேவியின் கோபத்திற்கும், விஷ்ணு பகவானுக்கும் கோபம் ஏற்படும் என்பதால் காலில் தங்க கொலுசு, மெட்டி அணியக்கூடாதாம்.
ஆனால் அறிவியல் காரணம் என்னவெனில், தங்கம் உடம்பை வெப்பமாக்குகின்றது. ஆனால் வெள்ளி உடலை குளிர்விப்பதால், இடுப்பிற்கு மேல் தங்கமும், இடுப்பிற்கு கீழே வெள்ளியும் அணியப்படுவதாக கூறப்படுகின்றது.
உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தங்க உலோகத்தை அணிந்தால், அது உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும், இதனால் பல நோய்கள் உங்களை தாக்க வாய்ப்பு அதிகம்.
இது போன்று கொலுசு போடும் இடமானது கேது ஸ்தலமாகக் கருதப்படுகின்றது. இதற் காரணமாகவே காலில் தங்கக் கொலுசுகளை அணிய வேண்டாம் என்று கூறப்படுகின்றது.
இவ்வாறு இருந்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். மேலும் கேதுவில் குளிர்ச்சி இல்லையென்றால் எப்பொழுதும் எதிர்மறையான விடயங்களைப் பற்றிதான் சிந்திப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |