விபத்தில் பறந்த ஆட்டோ! நூலிழையில் உயிர்தப்பிய பெண்... பதறவைக்கும் காட்சி
இந்திய மாநிலமான கேரளாவில் ஆட்டோவிற்கு இடையே சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சி வெளியாகியுள்ளது.
கேரளாவில் நடந்த விபத்து
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் மது போதையில் இடுக்கி -புளியமலை சாலையில் அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் மோதி மின்கம்பத்தில் இடித்து நின்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நூலிழையில் உயிர் தப்பிய பெண்
இந்த விபத்தின் போது அசுர வேகத்தில் வந்த கார் மோதியதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ பறக்கும் அதே வேளையில் காருக்கும் ஆட்டோவுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயர்த்தப்பியுள்ளார்.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் மதுபோதையில் இருந்த கார் ஓட்டுநர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்ணின் பதற வைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.