வீட்டில் இருந்தபடியே பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்: முழு விபரங்கள்
பெண்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட திட்டம் தான் LIC Bima Sakhi Yojana, இதன் மூலம் 18 வயது முதல் 70 வயதுடைய பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 சம்பாதிக்க முடியும்.
LIC Bima Sakhi Yojana
கிராமப்புறங்களை மையமாக கொண்டு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட திட்டமே Bima Sakhi Yojana.
பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதற்கும், காப்பீடு தொடர்பான முறையை கிராம மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் குறித்த திட்டம் தொடங்கப்பட்டது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் LIC முகவர்களாக மாறி முதல் ஆண்டில் ரூ.7,000 மாத உதவித்தொகை பெறலாம்.
மேலும் இரண்டாம் வருடத்திற்கு ரூ.6,000 மாதாந்திர உதவித்தொகை (முதல் வருடத்தில் 65 பாலிசிதாரர்கள் இன்னும் செயலில் இருந்தால்), மூன்றாம் வருடத்திற்கு ரூ.5,000 மாதாந்திர உதவித்தொகை (இரண்டாம் வருடத்தில் 65 பாலிசிதாரர்கள் இன்னும் செயலில் இருந்தால்) பெறலாம்.
இந்தத் திட்டம் பெண்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் காப்பீடு குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது.
இதில் சேரும் பெண்களுக்கு LIC தகுந்த பயிற்சி அளித்து, பாலிசிகளை விற்கவும், காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் செய்கிறது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரையுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
எல்.ஐ.சியின் தற்போதைய முகவர்கள் அல்லது ஊழியர்கள், பழைய முகவர்கள் அல்லது ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் முன்னர் எல்.ஐ.சி முகவர்களாக இருந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் (கணவர், குழந்தைகள், பெற்றோர்கள் போன்றவை) ஆகியோர் விண்ணப்பிக்க முடியாது.
ஆவணங்கள்
- வயது சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
- முகவரிச் சான்றின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
- கல்வித் தகுதி சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
- பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம்
விண்ணப்பிப்பது எப்படி?
LIC இணையதளம் அல்லது அருகிலுள்ள LIC அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
LIC Bima Sakhi Yojana விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
அடுத்தபடியாக நேர்முகத்தேர்வு நடைபெறும், இதில் தெரிவானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தவறான மற்றும் பூர்த்தி செய்யப்படாத தகவல்கள் இருப்பினும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.