அடிக்கடி மனைவியிடம் கணவன் செய்த மோசமான காரியம்! இறுதியில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை
கணவன் குடித்துவிட்டு கொடுமைப்படுத்தியதாலும், சந்தேகமடைந்து துன்புறுத்தியதாலும் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடம் இடுவாய்பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி துளசிமணி. மது போதைக்கு அடிமையான ஆனந்தகுமார் அடிக்கடி குடித்துவிட்டுவந்து தனது மனைவியுடன் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இதனிடையே, சம்பவத்தன்றும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ஆனந்தகுமார், தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த மனைவி துளசிமணி தனது சகோதர, சகோதரிகளின் புகைப்படங்களுடன் வாட்ஸ் ஆப்பில் மிஸ் யூ என ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.