கணவனை பிடிக்கவில்லையா? உடனே மாற்றி விடலாம்! இப்படியொரு சுதந்திரம் எங்கு தெரியுமா
பொதுவாக திருமணம் செய்பவர்கள் இரண்டே ரகம் தான். ஒன்று காதல் திருமணம் செய்பவர்கள், மற்றொன்று வீட்டில் பேசி திருமணம் செய்வார்கள். அந்தவகையில் உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், மதம், மொழி என எல்லாமே மாறுபட்டுதான் காணப்படும்.
அந்தவகையில் கணவனைக் பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிவிடலாம் என்ற ஒரு சுதந்திரம் ஒரு நாட்டில் இருந்து வருகிறது.
கணவனை மாற்றிவிடலாம்
இந்தோனேசியாவிற்கு அருகேயுள்ள நியூ கினியாவில் ட்ரோப்ரியான்ட் என்னும் பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமானது.
இன்றும் இவர்கள் பாரம்பரிய முறையை பின்பற்றிதான் வாழ்கிறார்கள். இவர்கள் ஆடைகளை உடுத்துவதில்லை. மேலும், இங்குள்ள பெண்களுக்கு அவ்வளவு சுதந்திரம் இருக்கிறது.
இதில் உச்சம் என்னவென்றால் ஒரு பெண் தன் கணவனுடன் ஒத்துப்போகமால் சண்டையிட்டு வாழ்ந்துக்கொண்டிருந்தால் கணவரை மாற்றிவிடலாம் என்ற ஒரு சுதந்திரம் உள்ளது.
மேலும், கணவரைப் பிரிந்து விட்டு வேறொரு துணையுடன் வாழலாம். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு. இந்த நாட்டில் திருமணத்திற்குப் பிறகு கன்னித்தன்மையை சோதிக்கும் பழக்கம் இல்லை.
கன்னிப் பெண்களுக்கு என பிரத்யேகமாக “புகுமாத்துலா” என அழைக்கப்படும் ஒரு தனி வகை குடிசை வீடு அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு பெண்கள் தங்கள் காதலனுடன் இருக்கலாம்.
மேலும், இவர்களுக்கிடையில் இன்னும் நிறைய நிறைய திருமண வாழ்க்கை குறித்து வித்தியாசமான பழக்கவழக்கங்கள் இருக்கின்றது.