வித்தியாசமான முறையில் தனது காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வலம் வருகிறார்.
அவ்வப்போது தன்னுடைய வாழ்க்கை மற்றும் காதலருடன் ஆன டேட்டிங் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பதிவு
இந்நிலையில் தற்போது இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை னது காதலுடன் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதில் ”உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று கருப்பு மரத்தை நட்டு ஒரு வித்தியாசமான கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினோம்.
ஏனென்றால் நாங்கள் இருவரும் பயணம் செய்வதிலும் வேலை செய்வதிலும் மிகவும் பிஸியாக இருந்தோம்.
மேலும் நாம் பெற்ற வாழ்க்கைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் உண்மையான நன்றியுடன் இருப்பதற்கு ஒரு நொடி எடுத்துக்கொள்வோம். கடினமான மற்றும் அழகான நாட்களில் எங்களை முன்னே அழைத்துச் சென்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.