முக்கியமான ஒன்றை கூற வேண்டும்... விஜய் வீட்டு வாசலில் மந்திரம் ஓதிய மூதாட்டி!
விஜயிடம் முக்கியமான ஒன்றை கூற வேண்டும் என தவெக தலைவரும் நடிகருமான விஜய் வீட்டு வாசலில் உற்று நோக்கியபடி மந்திரம் ஓதிய மூதாட்டியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ஆம் திகதி நடந்து முடிந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விஜய் சென்றிருந்தார்.

அதை தொடர்ந்து நேற்றைய தினம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.அங்கு விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள்.

சீரடி சாய்பாபா கோவிலுக்கு தரிசனம் செய்ய விஜய் சென்றுள்ள நிலையில், வெள்ளை நிற ஆடை அணிந்து, வள்ளலார் மற்றும் சாய்பாபா பக்தர் போல் தோற்றமளித்த 71 வயது மூதாட்டி ஒருவர் விஜய் வீட்டின் முன் தியானம் செய்துள்ள காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த மூதாட்டி விஜய் வீட்டைச் சுற்றி வந்து, வாசலில் அமர்ந்து உற்று நோக்கியபடி மந்திரம் ஓதுவது போல் தியானம் செய்துள்ளதுடன், விஜய்யை நேரில் பார்க்கும் வரை அங்கிருந்து நகர மாட்டேன் எனவும் அவரிடம் முக்கியமான ஒன்றை கூற வேண்டும் எனவும் அடம் பிடித்துள்ளார் என சில காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இருப்பினும் இது எந்தளவுக்கு உண்மை என்பது புலப்படவில்லை.காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |