வீட்டிலேயே இருந்து 30 கிலோ எடை குறைத்த பெண்: இவரின் டயட் முறை என்ன தெரியுமா?
எந்தவித சப்ளிமெண்ட்ஸ், ஃபேட் டயட் அல்லது நிபுணர் வழிகாட்டுதலின்றி சுமார் 30 கிலோ எடையை வெற்றிகரமாக குறைத்துள்ளார் இது எப்படி சாத்தியப்படுத்தினார் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எடை குறைத்த பெண்
இவர் பருமனாக இருந்த சமயத்தில் இவருடைய ஆடை XXL அளவாக இருந்தது. தற்போது எந்த நிபுணரின் அறிவுரையும்இல்லாமல் வீட்டில் இருந்தபடியே சுமார் 30 கிலோ எடையை இவர் குறைத்துள்ளார்.
இதன்போது இவர் எந்தவித சப்ளிமெண்ட்ஸ், ஃபேட் டயட் எதுவும் இருக்கவில்லை. இந்த பெண் மே 2020-ல் 95 கிலோ எடையுடன் தனது எடை குறைப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
பின்னர் டிசம்பரில் 63 கிலோவாக மெலிந்துள்ளார்.“30 கிலோவை குறைக்க எனக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆறு மாதங்கள் எடுத்திருக்கிறது. இவர் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் குறித்து சில தகவல்களை திரட்டியுள்ளார்.
இதன்போது இவா எப்படி உடல் எடையை குறைத்தார் என கூறியுள்ளார். அவர் பேசம் போது பெரும்பாலானவை ஒரே வகையான ஊட்டச்சத்து அல்லது உணவைக் குறைக்க வேண்டும் என்றே இருந்தது.
நான் வாழ்நாள் முழுவதும் பயிற்சி செய்யக்கூடிய நிலையான ஒன்றை விரும்பினேன். எந்தவொரு பயனுள்ள எடை இழப்பு டயட்டும் கலோரி பற்றாக்குறையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்.
நான் உண்ணும் கலோரியை கணக்கிடும் செயலியை இன்ஸ்டால் செய்து, வாரத்திற்கு 1 பவுண்டு எடையை இழக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டேன். அதற்கு தினசரி 500-600 கலோரிகள் பற்றாக்குறையை உருவாக்க வேண்டும் என்று கண்டுபிடித்தேன்.
இதற்க நான் எனது உணவு பகுதிகளை கட்டுப்படுத்தியதோடு, தொடர்ந்து உடற்பயிற்சி செய்தேன். எப்போதும் நடைப்பயிற்ச்சி செய்தேன்.இதனிடையில் நான் தினமும் உண்ணக்கூடிய சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு, பொரித்த உணவுகளை தவிர்த்துவிட்டேன்.
வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட்டேன். அதேபோல் பட்டினி கிடக்காமல் அளவாக சாப்பிட பயிற்சி செய்தேன்.இதற்காக நிறைய தண்ணீர் குடித்தேன்.கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் புரதத்தின் சரியான சமநிலை இருக்குமாறு பார்த்துக்கொண்டேன்.
ஒரு சைவ பிரியராக, எனது தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நான் சிரமப்பட்டாலும், எனது உடல் எடையில் குறைந்தது 70% கிராம் அளவிற்கு புரதம் எடுப்பதை இலக்காகக் வதை்திருந்தேன்.இதை முறைப்படி பின்பற்றியதால் நான் தற்போது எனது உடல் எடையை 30 குறைத்துள்ளேன் என கூறினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |