Viral Video: ஆளை மயக்கும் சிவப்பு நிற சேலையில் வெளிநாட்டில் சுற்றித்திரியும் பெண்
கண்ணை கவரும் சிவப்பு நிற சேலை அணிந்தபடி சீன நகர தெருக்களில் சுற்றித்திரியும் இளம்பெண்ணின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
இந்திய பெண்களின் கலாச்சார உடைகளில் சேலைக்கு மிக முக்கிய இடமுண்டு, சேலை அணிவதே நம் பாரம்பரியம்.
விதவிதமான ரகரகமான புடவைகளில் பல கதைகளை சொல்லும் சுவாரசியங்களும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ம் திகதி சேலை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டினர் கூட சேலையை விரும்பி அணிவதையும் அதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களையும் நாம் பார்த்திருப்போம்.
இந்த பதிவில் சீன தெருக்களில் இளம் பெண் ஒருவர் சேலை அணிந்தபடி சுற்றிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
அவரது இன்ஸ்டாகிராமில், இந்தியாவில் மட்டும் தான் சேலை அணிய வேண்டுமா? என கேட்டுள்ளார்.
சிவப்பு நிற சேலையில் அந்த பெண்ணை பார்த்த சீன நாட்டினர், வித்தியாசமான முகபாவனைகளை வெளிப்படுத்துகின்றனர்.
அவரது பெயர் வெரோனிகா கோயல், போலந்தை சேர்ந்த இவர் இந்தியரை திருமணம் செய்து கொண்டார்.
குறித்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |