தனது உடம்பில் பற்றி எரிந்த தீ: அப்படியே குழந்தைகளை அணைத்துக்கொண்ட தாய்! 3 பேரும் உயிரிழந்த சோகம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் அங்கமாலி பகுதியில் துறவூரில் வசித்துவந்தவர் அனுப். கடந்த மாதம் 2ஆம் தேதி மாரடைப்பால் இவர் மரணமடைந்தார். இதனால் அவரது மனைவி அஞ்சு கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
தனது பிள்ளைகள் 7 வயது ஆதிரா 3 வயது அனுஷா ஆகிய இருவருடனும் வசித்து வந்தவர், கணவர் அனூப்பின் பிரிவை தாங்க முடியாமல் ஒவ்வொரு நாளையும் கடத்தி வந்து இருக்கிறார். கணவரின் பிரிவை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து மீள முடியாமலும் இருந்த அவர் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
தான் தற்கொலை செய்து கொண்டால் தனது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று அச்சப்பட்டவர் குழந்தைகளையும் கொன்றுவிட முடிவு செய்திருக்கிறார். இதை அடுத்து சம்பவத்தன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார், .
உடல் தீப்பற்றி எரிந்ததும் ஓடிப்போய் இரு குழந்தைகளையும் கட்டியணைத்துக் கொண்டு இருக்கிறார். மளமளவென்று குழந்தைகள் மீதும் தீ பற்றி இருக்கிறது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்.
குழந்தைகள் ஆதிரா, அனுஷா இருவரும் சிகிச்சை பலனின்றி முதலில் உயிரிழந்தனர். இதன் பின்னர் ஆபத்தான நிலையில் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஞ்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணவரின் பிரிவை தாங்க முடியாது மனைவி தற்கொலை செய்து கொண்டதும் அதனால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.