முதுகுவலிக்கு உடற்பயிற்சி செய்த பெண்! தலைகீழாக மாட்டிய சோகம்
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உடற்பயிற்சி நிலையத்தில் உள்ள இயந்திரத்தில் தலைகீழாக சிக்கிக்கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற பெண்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் ஃபால்ட்ஸ். இவர் தினந்தோறும் உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வதும், அங்கிருந்து காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
சம்பவத்தன்று அதிகாலை 3 மணிக்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற அவர், எப்பொழுதும் போல் தனது மொபைலில் கமெராவை ஆன் செய்து வைத்துவிட்டு முதுகுவலியை குறைக்க உடற்பியற்சியினை மேற்கொண்டுள்ளார்.
இவர் உடற்பயிற்சி செய்ய வந்த போது ஒருசிலர் மட்டுமே இருந்துள்ளனர்.

தலைகீழாக சிக்கிய சோகம்
தலைகீழாக தொங்கிய நிலையில் உடற்பயிற்சி செய்த போது அவரால் எழ முடியாமல் போயுள்ளது. உடனே உதவிக்கு வரக்கோரி சத்தம் போட்டும் பலனில்லை. காரணம் அங்கிருந்தவர்கள் அனைவரும் கிளம்பி சென்றுவிட்டார்கள்.
உடனே தனது கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் பொலிசாருக்கு அவசர அழைப்பை அழைத்துள்ளார்.
நடந்ததைக் கூறிய நிலையில், பொலிசார் ஒருவழியாக உடற்பயிறசி கருவியில் சிக்கியிருந்த குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
மேலும், போதிய உதவி இல்லாத நிலையில் இதுபோன்ற கடினமான உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என அவருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
