கணவரின் போனை உளவு பார்த்து மனைவி.. நீதிமன்ற கொடுத்த அதிரடி தண்டனை!
பெண் ஒருவர் அவரது கணவரின் மொபைல் போனை உளவு பார்த்ததற்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் ஒரு பெண், அவரது கணவரின் மொபைல் போனை உளவு பார்த்துள்ளார். மேலும், அவரது கணவரின் புகைப்படங்களையும், பதிவுகளையும் மாற்றி அவரது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு கணவரை அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால், கணவன் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அதற்காக தனக்கு நஷ்டஈடு பெற்றுத் தர வேண்டும் எனவும் கணவர் வழக்குத் தொடந்துள்ளார்.
மேலும், தனக்கு வேலை இல்லாததால் வழக்கைத் தொடர, தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும், இந்த வழக்கு தனக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், மனைவி கூறுகையில், என் கணவர் என்னையும்,எங்களது மகளையும் வீட்டிலிருந்து வெளியேற்றி, ஆதரவின்றி விட்டுவிட்டார் என்று கூறினார்.
இதுகுறித்த வழக்கினை விசாரனை செய்த நீதிபதி மனைவி மீது குற்றமிருப்பது ஆதாரபூர்வமாக நிறுபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சட்டரீதியான கட்டணம் மற்றும் கணவருக்கு இழப்பீடாக 5,431 திர்ஹாம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ .1,07,329) வழங்க வேண்டும்” என்று கூறி உத்தரவிட்டனர்.